பி.எம்.இந்தியா

பிரதமர் திரு. நரேந்திர மோடியை சிங்கப்பூர் துணை பிரதமர் மேதகு திரு.தர்மன் சண்முகரத்தினம் புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிங்கப்பூர் பிரதமர் மேதகு திரு.லீ சீன் லூங் இந்தியாவுக்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். அப்போது நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செயல்படுத்த இருதரப்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் வரவேற்றார்.
ஜிஎஸ்டி-யை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக பிரதமருக்கு திரு.சண்முகரத்தினம் பாராட்டு தெரிவித்தார். இருதரப்பு நல்லுறவுகள், குறிப்பாக பொருளாதார விவகாரத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை பிரதமரிடம் அவர் விளக்கினார்.
முதலீடு, நகர்ப்புற மேம்பாடு, விமானப் போக்குவரத்து, திறன் வளர்ப்பு போன்ற துறைகளில் உள்ள நெருங்கிய இருதரப்பு உறவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்தார்.
வங்கித்துறை, டிஜிட்டல் நிதி, சுற்றுலா, புத்தாக்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
Had a wonderful meeting with Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore. pic.twitter.com/PeIWaxSyCs
— Narendra Modi (@narendramodi) July 22, 2017