Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மும்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சருடன் பிரதமர் பேச்சு. மத்திய அரசின் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்ய உறுதி


மும்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நாவிசுடன் பேசினார். அடை மழையால் ஏற்படக்கூடிய நிலைமையை சமாளிக்க மத்திய அரசின் இயன்ற உதவிகள் அனைத்தையும் வழங்குவதாக பிரதமர் அப்போது உறுதியளித்தார்.

“மும்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நாவிசுடன் பேசினேன்.

அடை மழையால் ஏற்படக்கூடிய நிலைமையை சமாளிக்க மத்திய அரசின் இயன்ற உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு வழங்கும்.

மும்பை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்துகிறேன். கன மழைகாரணமாக ஏற்படக்கூடிய நிலைமையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****