பி.எம்.இந்தியா
மியான்மரில் பகான் என்ற இடத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கோவில் கோபுரங்களை பாதிக்க புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, 2017 செப்டம்பர் 6-7 தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மியான்மரில் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தின்போது கையெழுத்திடப்பட உள்ளது.
இந்த திட்டப்பணிகள் அமல்படுத்தப்படுவதன் மூலம் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையே கலாசாரம் மற்றும் சமய ரீதியான உறவுகளை மேலும் பலப்படுத்த உதவும். மேலும், இதில் மத ரீதியான மற்றும் சுற்றுலா ரீதியான முக்கியத்துவம் இருப்பதால் இந்திய மற்றும் மியான்மர் மக்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்கவும் உதவும். மியான்மருடன் வளர்ச்சிக்கான கூட்டாண்மையை மேம்படுத்தவும் இந்த திட்டப்பணிகள் பங்களிக்கும். பகான் நகரம், மியான்மரில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முன்னணி நகரங்களில் ஒன்றாகும். இங்குள்ள நினைவிடங்களை மீட்பது மற்றும் பாதுகாப்பதில் இந்தியாவின் திறனை மியான்மர் மக்கள் மட்டுமின்றி சர்வதேச சுற்றுலா பயணிகளிடமும் வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பினை அளிக்கும்.