Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காவலர் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், காவலர் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தேசிய காவல் துறையின் திறன்களை அதிகரிக்கவும், அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதியில் இருந்து 5 ஆண்டு காலத்துக்கு இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மேற்கொண்டு மாறுதல்கள் மற்றும் / அல்லது திருத்தங்கள் இல்லை என்ற நிபந்தனையுடன் மேலும் 5 ஆண்டுகளுக்கு இதை நீட்டிப்பு செய்யலாம்.

பின்னணி :

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நட்புறவு கொண்ட நாடுகள். ஆப்கானிஸ்தான் தேசிய காவல் துறையினர் இந்தியாவில் பல்வேறு பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதற்காக அடிக்கடி வருகிறார்கள்.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஏற்கெனவே அக்டோபர் 2011-ல் “பாதுகாப்பு முக்கியத்துவத்தில் பங்களிப்பு குறித்த ஒப்பந்தம்” -ல் கையெழுத்திட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டு உள்நாட்டு விவகார அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டுத் திட்டம் (UNDP), ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளும், புதுடெல்லியில் உள்ள MHA-வின் காவல் ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தின் (BPR&D) அதிகாரிகளும் அக்டோபர் 2016-ல் சந்தித்துப் பேசியுள்ளனர். காவலர் பயிற்சி, காவலர் மேம்பாடு, சட்டம் அமலாக்கம், ஆப்கானிஸ்தானில் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துதல் ஆகிய துறைகளில் இந்தியாவின் உதவி வேண்டும் என ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு, தூதரக வழிமுறைகள் மூலமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்டது.