பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் பெலாரஸ் நாட்டுக்கும் இடையில் முதலீடுகள் குறித்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) கையெழுத்திடுதல் மற்றும் பின்னேற்பு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் அதிகரிக்க வகை செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து, நேரடி அந்நிய முதலீடும் (FDI), கடல்கடந்த நேரடி முதலீடும் (ODI) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூரேசியன் பொருளாதார யூனியனில் (EAEU) பெலாரஸ் நாடு உறுப்பினராக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் பின்னேற்பு அளித்தல், முக்கியமானதாக இருக்கும். மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த விஷயங்களின் அடிப்படையில் , இந்தியா ஏற்கெனவே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த விஷயங்களை கிர்கிஸ்தான் குடியரசுடன் தொடங்கியுள்ளது. புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் உருவாக்க ரஷிய கூட்டமைப்புடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.