பி.எம்.இந்தியா
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே இரட்டை வரி முறையை நீக்குவதற்காக ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தின் நெறிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் இதனால் மூலதனம் மற்றும் வருமானம் ஆகியவற்றில் வரிகள் ஏய்க்கப்படுவது தடுக்கவும் தேவையான விதி முறைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த நெறிமுறைகளின் மூலம் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ள வரிகள் தொடர்புடைய தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். வங்கி கணக்கு பதித்த தகவல்கள் மற்றும் உள்நாட்டு வரிகள் குறித்த தகவல்கள் இதில் அடங்கும். இஸ்ரேலில் குடியிருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை மற்ற சட்ட நிறுவனங்களுடன் இஸ்ரேல் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். அதேபோல இந்தியாவில் குடியேறிய இஸ்ரேலியர்களின் தகவல்களும் பறிமாற்றம் செய்யப்படும்.
ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ள பிரிவுகள் குறித்தும் இந்த நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த்த்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்திலும் அல்லது வரி ஏய்ப்பு இருக்கும் பட்சத்திலும் தேவையான நடவடிக்கைகளை உள்நாட்டு சட்டங்கள் மூலம் பயன்படுத்த இந்த பிரிவு வகை செய்கிறது.
பின்னணி
இரட்டை வரி விதிப்பு குறித்த 1996 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவும் இஸ்ரேலும் 27வது பிரிவில் காணப்படும் தகவல் பறிமாற்றம் குறித்த நெறிமுறைகள் தற்போது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் உள்ளன.