Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கப்பல் மற்றும் துறைமுக ஊழியர்களுக்கு 2014-15லிருந்து 2015-16 வரையிலான உற்பத்தியுடன் இணைந்த வெகுமதி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


கப்பல் மற்றும் துறைமுக ஊழியர்களுக்கு 2014-15லிருந்து 2015-16 வரையிலான உற்பத்தியுடன் இணைந்த வெகுமதி திட்டத்தை விரிவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தொகையை ஈடு செய்த பின்னர் அந்த ஆண்டிற்கான உற்பத்தியுடன் இணைந்த வெகுமதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

உற்பத்தியுடன் இணைந்த வெகுமதித் திட்டத்திற்கான செலவை துறைமுக பொறுப்புக் கழகங்கள் ஏற்கும். அரசின் நிதிநிலை அறிக்கையின் மூலம் நிதியுதவி பெறாமல், துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் வருமானத்தின் மூலம் இத்தொகை அளிக்கப்படும்.

இதன்மூலம், கப்பல் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என சுமார் 44 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள். இதனால் துறைமுகப் பிரிவின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் சிறந்த தொழில் உறவுகள் ஏற்படும். பெரிய துறைமுகப் பொறுப்புக் கழகங்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த வெகுமதித் திட்டத்தின் தொகை அளிக்கப்படும் தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டு, தற்போதுள்ள திட்டத்தின்படி அனைத்து ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் 2014-15 ஆண்டிலிந்து 2015-16 வரையிலான தொகை அளிக்கப்படும்.

***