Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் இத்தாலி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் அறிவியல் துறையில் இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முந்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017, நவம்பர் 29ம் தேதி புதுதில்லியில் கையொப்பமானது.

கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியது:

  1. மருத்துவர்கள், அதிகாரிகள், இதர சுகாதார நிபுணர்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்கள் பரிவர்த்தனை மற்றும் பயிற்சி;
  2.  மனித வளங்களை உருவக்குவது, சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு வசதிகளை அமைப்பது ஆகியவற்றில் உதவி
  3. சுகாதாரத் துறையில் மனித வளங்களுக்கு குறுகிய கால பயிற்சி
  4. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் வரன்முறை மற்றும் தகவல் பரிமாற்றம்
  5. மருந்து உற்பத்தி துறையில் வர்த்தக மேம்பாட்டு வாய்ப்புக்களை உருவாக்குவது
  6. பொது மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் மற்றும் மருந்து விநியோகஸ்தர்களை கண்டறிய உதவி
  7. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொள்முதல்
  8. நரம்பியலிருதய நோய்கள், புற்றுநோய், சி.ஓ.பி.டி.க்கள், மன நல பாதிப்பு மற்றும் டிஜென்ஷியா போன்ற பரவாத நோய்களை தடுப்பதற்கான பரஸ்பர நலம்தரும் ஒத்துழைப்பு எஸ்.டி.ஜி. 3 மற்றும் தொடர்புடைய அம்சங்கள்உக்கு முக்கியத்துவம்;
  9. பரவும் நோய்கள் மற்றும் வெக்டர் போர்ன் நோய்களில் பருவ நிலை மாற்றத்தால் தாக்கம் ஏற்படும் துறைகளில் ஒத்துழைப்பு;
  10.  எஸ்.டி.ஜி. 2 தொடர்பாக உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்து அம்சங்கள் (கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்தின்மை) மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் ஏற்படுத்துதல்
  11. உணவு தயாரித்தல், மாற்றியமைத்தல், விநியோகத்தில்பாதுகாப்பு
  12. உணவுத் துறையில் செயல்படுவோருக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
  13. சுத்தமும் உணவுப் பாதுகாப்பும் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறீத்து மக்களுக்கு தகவல் அளிப்பது
  14. இருதரப்பினரும் பரஸ்பரம் முடிவு செய்யும் இதர பகுதிகளில் ஒத்துழைப்பு

ஒத்துழைப்புக்கான விவரங்களை மேலும் விவரிக்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும் கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்.