Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் கியூபா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா மற்றும் கியூபா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017, டிசம்பர் 6ம் தேதி புதுதில்லியில் கையொப்பமானது.

கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியது:

மருத்துவர்கள், அதிகாரிகள், இதர சுகாதார நிபுணர்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்கள் பரிவர்த்தனை மற்றும் பயிற்சி;

  1.  மனித வளங்களை உருவாக்குவது, சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு வசதிகளை அமைப்பது ஆகியவற்றில் உதவி
  2. சுகாதாரத் துறையில் மனித வளங்களுக்கு குறுகிய கால பயிற்சி
  3. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வரன்முறை மற்றும் தகவல் பரிமாற்றம்
  4. மருந்து உற்பத்தி மற்றும் தரப்பினரால் அடையாளம் காணப்பட்ட துறைகளில் வர்த்தக மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குவது
  5. பொது மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வாங்குவது மற்றும் மருந்து விநியோகஸ்தர்களை கண்டறிய உதவி
  6. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொள்முதல்
  7. இருதரப்பினரும் பரஸ்பரம் முடிவு செய்யும் இதர பகுதிகளில் ஒத்துழைப்பு

ஒத்துழைப்புக்கான விவரங்களை மேலும் விவரிக்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும் கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்.