பி.எம்.இந்தியா
மேதகு உறுப்பினர்களே, ஆப்பிரிக்க கூட்டுறவின் தலைவர் மேதகு ராபர்ட் முகாபே அவர்களே, ஆப்பிரிக்க கூட்டுறவு கமிஷனின் தலைவர் மேடம் டிலாமினி-ஜுமா அவர்களே மற்றும் உள்ள மாண்புமிகு உறுப்பினர்களே,
ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளின் கொடிகள் இங்கு பறப்பதால் உலகத்தின் இழை வளம் பெற்றுள்ளது. இந்நாடுகளின் பல வண்ணக் கொடிகள் தில்லி மாநகரத்திற்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ளது.
இங்கு கூடியுள்ள ஆப்பிரிகாவின் 41 நாடுகளில் தலைவர்கள் மற்றும் மற்ற நாடுகளில் பிரபலமான தலைவர்கள் நூற்றுக்கணக்கான மூத்த அதிகாரிகள், வர்த்தக தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் இங்கு கூடியிருப்பதால் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
வரலாறு துவங்கிய இடத்தில் இருந்து அங்கிருந்துதான் மனித இனமும் புதிய நம்பிக்கைகளும் உருவான இடத்தில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்கள்.
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள பாலைவனங்கள் ஆகியவற்றில் மனித நாகரீகம் தோன்றியது. பின்னர் அங்கிருந்து பல இடங்களுக்கும் பரவியது.
தெற்கிலிருந்து தான் நமது காலத்தின் மனசாட்சிகளான மகாத்மா காந்தி, ஆல்பர்ட் லுதிலி, நெல்சன் மண்டேலா ஆகியோர் தோன்றினர். அங்கிருந்தும் இங்கு வந்துள்ளனர்.
அட்லாண்டிக் கடற்கரையில் வரலாற்றில் பல சோகமான சம்பங்கள் நடந்திருந்தாலும் தற்போது பல வெற்றிகளை அது பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரையில் நமது அண்டை நாட்டினர் உள்ளனர். ஆப்பிரிக்காவின் இதய பகுதி கலாச்சாரத்திலும் இயற்கை தாராளமாகவும், பண்பாடு வளமாகவும் சிறந்து விளங்குகிறது. மேலும், தீவுகள் கொண்ட நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர்.
இந்தியா நட்புறவுடன் இதமாக அரவணைத்து உங்களை வரவேற்கிறது. இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே இது வெறும் கூட்டம் மட்டும் அல்ல. உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை கொண்டவர்கள் வசிக்கும் இடமாக இவை உள்ளன. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள அதே தொகையான 125 கோடி மக்கள் இணையும் இடமாக இது உள்ளது.
உலகின் மிகப் பழமையான நாகரீகங்களை நாம் கொண்டுள்ளோம்.
நம்மிடம் பலவிதமான மொழிகள் பேசும் மக்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன.
பல நூற்றாண்டுகளாக நமது வரலாறுகளில் பல மாறுதல்கள் இருந்துள்ளன. பூகோள அளவில் ஒரு சமயம் நாம் இருந்திருந்தோம். ஆனால் தற்போது இந்திய பெருங்கடலால் நாம் இணைக்கப்பட்டுள்ளோம். இந்தக் கடலில் உள்ள நீரின் ஓட்டத்தால் நமது உறவுகள், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்த பல தலைமுறையினர் ஒருவருக்கு ஒருவர் இந்தியர்கள் ஆப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்கர்கள் இந்தியாவிலும் பல சூழ்நிலைகளில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன் மூலம் நமது உறவுகள் வலுவாக இருந்தன.
நாம் பல ஆண்டு காலம் காலனி ஆதிக்கத்திலும் இருந்துள்ளோம். சுதந்திரத்திற்காக நாம் போராடி உள்ளோம். வாய்ப்புகள் மற்றும் நீதி ஆகியவற்றிக்காகவும் போராடி உள்ளோம். இதுவே மனித இனம் நன்கு வாழ்வதற்கு முக்கியமானது என்று ஆப்பிரிக்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
நாம் உலகில் ஒரே குரலில் பேசியுள்ளோம். தற்போது நமது வளத்திற்காக கூட்டுறவை மேற்கொண்டுள்ளோம்.
அமைதியை விரும்பி நாம் ஒன்றிணைந்துள்ளோம். பசிப் பட்டினி மற்றும் நோய்கள் ஆகியவற்றிற்கு எதிராக நாம் இணைந்து போராடியுள்ளோம்.
எதிர் காலத்தை நாம் உற்றுநோக்கினால் நம்மை ஒன்றிணைக்கும் விஷயம் மேலும் ஒன்றுள்ளது. அதுதான் நம் நாடுகளில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை.
இந்தியாவில் மூன்று இரண்டு பகுதியினர் அதேபோல் ஆப்பிரிக்காவில் மூன்றில் இரண்டு பகுதியினரும் 35 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்கின்றனர். எதிர்காலம் இளைஞர்களுக்கானது என்றால் இந்த நூற்றாண்டில் இளைஞர்கள் உலகை சிறந்த முறையில் உருவாக்குவது என்பது நம்மிடம் உள்ளது.
மேன்மை தாங்கியவர்களே, ஆப்பிரிக்கா ஏற்கனவே அந்தப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் பழங்கால சாதனைகள் நம் அனைவருக்கும் தெரியும். அந்த நாடுகளின் நவீன போக்கு தற்போது உலக நாடுகளை கவர்ந்து வருகிறது.
ஆப்பிரிக்கா கண்டம் தற்போது நிலையான அமைதியுடனும், சீராகவும் உள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை பொறுப்புணர்வுடன் செயல்படுத்த ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிணைந்து வருகின்றன.
மக்களாட்சியைக் காப்பதற்கும், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், பெண்களுக்கு அதிகாரத்தை அளிப்பதற்கும் ஆப்பிரிக்கா பல போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் 20% அளவிற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர்களாக உள்ளனர்.
இதற்காக போராடிய அதிபர் சர்லீப்-க்கு இன்று அவரது பிறந்த நாளில் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சி தற்போது விரைவாக்கப்பட்டு வருகிறது. பழைய முறைகளை மாற்றி மண்டல அளவில் பொருளாதார ஒருங்கிணைப்பு முயற்சிகளை ஆப்பிரிக்க நாடுகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன.
பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்ளுவது, கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மற்றும் வளங்களை தேவையான அளவு பயன்படுத்துவது போன்றவற்றிற்கு பல உதாரணங்களை கூறலாம். பொருளாதாரத்தை நிலையாக மேற்கொள்ளும் வகையில் ஆப்பிரிக்க நாடுகள் தற்போது மாறி வருகின்றன.
2013ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நான்கு லட்சம் புதிய வர்த்தகங்கள் துவக்கப்பட்டன. அங்கு 95% அளவு மக்கள் தற்போது அலைப்பேசியை பயன்படுத்துகின்றனர்.
புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஆப்பிரிக்கா தற்போது உலகளாவிய முன்னேற்றத்தில் பங்கு கொண்டு வருகின்றன. எம் பேசா எனப்படும் அலைபேசி மூலம் வங்கிக் கணக்குகளை மேற்கொள்ளுதல், மெட்ஆப்பிரிக்கா எனப்படும் சுகாதார பாதுகாப்புத் திட்டம், அக்ரிமேனேஜர் எனப்படும் விவசாயத்திற்கான திட்டம் கிலிமோ சலாமா போன்றவை அலைபேசி மூலமாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாகவும் பயன்படுத்தப்படுவதால் ஆப்பிரிக்காவின் வாழ்க்கை முறை மாறியுள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் ஆகியவற்றில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றன. ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆப்பிரிக்காவில் தற்போது 90%த்தையும் தாண்டியுள்ளது.
ஆப்பிரிக்காவின் பரந்த நிலப்பரப்பில் வனவிலங்குகளும் காப்பாற்றப்பட்டு சுற்றுலாவும் மேம்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காவின் விளையாட்டு, கலை மற்றும் இசை ஆகியவை உலகை மகிழ்ச்சியடையச் செய்கின்றன.
ஆமாம், ஆப்பிரிக்கா மற்ற வளர்ந்து வரும் நாடுகளைப் போல மேம்பாட்டிற்கான சவால்கள் சந்தித்து வருகிறது. மற்ற நாடுகளைப் போல ஆப்பிரிக்க நாடுகளும், நிலையான தன்மை, பாதுகாப்பு, தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கப்படுவது போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்கள், ஆப்பிரிக்கர்கள் இந்த சவால்களை உறுதியுடன் சமாளிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
மேன்மைத் தாங்கியவர்களே,
அறுபது ஆண்டுகளாக சுதந்திரமான உணர்வுடன் நாம் இணைந்து செயலாற்றி வருகிறோம்.
தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் மற்றும் ஆப்பிரிக்காவின் எதிர்கால தேவைகள் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன.
உலக பொருளாதாரத்தில் நம்பிக்கை மற்றும் வாய்ப்புகள் ஆகியவை ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு பிரகாசமான நிலை காணப்படுகிறது.
ஆப்பிரிக்காவுடன் முன்னேற்றமான பாதையில் இணைந்து இந்தியா செயல்படுவதை பெருமையாக எடுத்துக் கொள்கிறது. பொருளாதார பயன்பாட்டிற்கு அப்பால் நமது நட்புறவு எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. இது உணர்ச்சிப் பூர்வமான அளவில் ஒன்றிணைந்ததால் நமது ஒற்றுமை அதில் பரிணமிக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளுக்குள் நமது வர்த்தகம் இரு மடங்காக உயர்ந்து 70 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் இந்தியா வர்த்தக முதலீடுகளை செய்துள்ளது. இந்திய சந்தையை அணுக 34 ஆப்பிரிக்க நாடுகளுக்கு தீர்வையற்ற வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஆப்பிரிக்காவில் ஆற்றல் உதவி செய்கிறது. அதன் வளங்கள் நமது தொழிற்சாலைகளை இயக்க பயன்படுகிறது. ஆப்பிரிக்காவின் செழிப்பு நமது இந்திய பொருட்கள் சந்தையை வளர்ச்சியுற வைக்கிறது.
2008ஆம் ஆண்டு இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு 7.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சலுகை அடிப்படையில் கடனும், 1.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நிதியுதவியும் இந்தியா அளித்துள்ளது. 100 திறன் மேம்பாட்டு நிலையங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து, தூய்மையான எரிசக்தி, நீர்ப்பாசன வசதி, விவசாயம், கட்டமைப்பு வசதிகள், பொருள்கள் தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்தியா முதலீடு செய்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 25,000 இளைஞர்களுக்கு இந்தியாவில் கல்வியும், பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த 25,000 இளைஞர்கள் நம்மிடையே புதிய நட்புறவை ஏற்படுத்தியுள்ளனர்.
மேன்மைத் தாங்கியவர்களே,
உங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் செய்யாமலும் அல்லது நீங்கள் அவற்றை கேட்காமலும் இருந்திருக்கும் காலகட்டங்கள் உண்டு. நாங்கள் கவனமாக இருக்கக்கூடிய நிலையில் இல்லாத காலகட்டங்களும் இருந்திருக்கின்றன. சில கடமைகளை நாங்கள் விரைவாக செய்ய முடியாமலும் இருந்திருக்கலாம்.
ஆயினும், இந்தியாவை நீங்கள் எப்போதும் நண்பனாகவே கருதி உள்ளீர்கள். எங்களது வெற்றிக்காகவும், சாதனைகளுக்காகவும் நீங்கள் பெருமை கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் எங்களுக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டுள்ளீர்கள்.
இது தான் நம்மிடையே உள்ள நட்புறவிற்கு வலிமை சேர்ப்பதாகும்.
எதிர்காலத்தில் நாங்கள் பயணம் மேற்கொள்ளும்போது உங்களது வழிகாட்டுதல்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் செயல்படுவோம்.
வளமான, ஒருங்கிணைந்த ஆப்பிரிக்காவை உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு எங்களது ஆதரவையும் நாங்கள் மேலும் உயர்த்த உள்ளோம்.
கெய்ரோவிலிருந்து கேப் டவுன் வரையிலும், மராகேசிலிருந்து மும்பாசா வரையிலும் இணைக்க நாங்கள் உதவி செய்வோம். கட்டமைப்பு வசதிகள் மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவி செய்வோம். ஆப்பிரிக்காவின் வளங்களை மேலும் விரிவாக்க உதவுவோம். தொழில்பேட்டைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் ஆகியவற்றையும் நாங்கள் அமைப்போம்.
மேன்மைத் தாங்கியவர்களே,
ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு முதலாவது தேவை மனித வள ஆற்றல் என்று நைஜீரியாவின் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஓல் சோயிங்கா கூறியுள்ளார்.
எங்களது அணுகுமுறையும் அதே நம்பிக்கையின் அடிப்படையில் தான் உள்ளது. மனித வள ஆற்றல் மற்றும் அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை சிறந்த நட்புறவை மேம்படுத்தும் வகையில் இருக்கும். இவையே ஒரு நாட்டுக்கு அதிகாரம் அளித்து தேவையான திட்டங்களை சுதந்திரமாக மேற்கொண்டு அதனுடைய வளர்ச்சிக்கு பொறுப்புள்ளதாக்கும். இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும் அளிக்கும்.
ஆகவே, மனித வள மேம்பாட்டிற்கு முதலீடு செய்வதன் மூலம் நட்புறவு எல்லா வகையிலும் ஏற்படும். தொலைபேசி மூலம் கல்வி மற்று கல்வி நிலையங்களை ஆப்பிரிக்காவில் அமைப்பது போன்றவற்றையும் மேற்கொள்ளுவோம்.
அறிவியல் மக்களை ஒன்றிணைத்து அந்த கருத்துகளின் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று எகிப்து நாட்டின் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ் கூறியுள்ளார்.
அறிவியல் மக்களை ஒருங்கிணைக்க வைத்து வளர்ச்சியை ஏற்படுத்தும் திறமை உள்ளது என்பதை இதைவிட சிறந்த முறையில் கூற முடியாது.
ஆகவே நமது கூட்டுறவுக்கு தொழில்நுட்பம் சிறந்த அடித்தளமாக அமையும்.
ஆப்பிரிக்காவில் விவசாயப் பிரிவை மேம்படுத்த இது உதவும். உலகில் உள்ள விளைநிலங்களில் 60%க்கும் மேல் ஆப்பிரிக்காவில் உள்ளது. ஆயினும் இதிலிருந்து 10% அளவிற்கு தான் உற்பத்தி கிடைக்கிறது. ஆகவே, ஆப்பிரிக்காவில் விவசாயம் அக்கண்டத்தின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் வழி வகுக்கும். மேலும் உலக அளவில் உணவு பாதுகாப்புக்கும் ஆதரவு அளிக்க முடியும்.
சுகாதார வசதிகளை அளிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் குறைந்த விலையில் மருந்துகள் ஆகியவற்றை இந்தியா அளிக்க முடியும். இதனால் பல நோய்களை எதிர்த்து போராட இயலும். இதன் மூலம் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற இயலும். இந்தியா-ஆப்பிரிக்கா பாரம்பரிய முறைகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை அளிக்கவும் நாங்கள் உங்களுடன் ஒத்துழைப்போம்.
எங்களது தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அறிவையும் நாங்கள் அளிப்போம். மேம்பாடு, பொதுமக்கள் சேவை, ஆட்சிமுறை, பேரிடர் மேலாண்மை, வளங்களுக்கான நிர்வாகம், மற்றும் தரமான வாழ்க்கை முறை ஆகியவற்றிற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறையையும் நாங்கள் அளிப்போம்.
மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உருவாக்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கான கணிணி இணைப்பை நாங்கள் விரிவுபடுத்த இயலும். இதனால் இந்தியாவுக்கும் 48 ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் இடையே இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கணினி மூலமான பல்கலைக்கழகத்தை அமைக்க உதவி செய்யப்படும்.
டிஜிட்டல் முறையில் ஆபிரிக்கா நாடுகள் இடையேயும், ஆப்பிரிக்கா மற்றும் உலக நாடுகள் இடையேயும் டிஜிட்டல் முறையில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்ளுவோம்.
கடல் பொருள்கள் பொருளாதாரத்தில் நிலையான மேம்பாட்டை அடைய நாங்கள் ஒத்துழைப்போம். இது எதிர்கால வளத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை கடல் பொருள்கள் பொருளாதாரம் என்பது நீலப்புரட்சியின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் நீல நிற வானத்திலும், நீல நிற கடல்நீரிலும் உள்ள வளங்களை நாம் பயன்படுத்தும் தூய்மையான வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியம்.
மேன்மைத் தாங்கியவர்களே,
சூரியன் மறையும்போது இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களில் இருள் சூழ்கிறது. இந்த இல்லங்களில் உள்ள மக்களின் வாழ்வில் ஒளியேற்றி அந்த இல்லங்களில் எதிர்காலத்தில் மின்சக்தியை அளிக்க வேண்டும்.
ஆனால் இதன் மூலம் கிளிமஞ்சாரோவில் உள்ள பனிப்பாறை மறையக்கூடாது. கங்கை நதிக்கு நீர் அளிக்கும் பனிமலைகள் உருகக்கூடாது. நமது தீவுகள் அழிந்து விடக்கூடாது.
புவி வெப்பமாவதற்கான காரணிகளாக இந்தியாவும் ஆப்பிரிக்காவும் எவ்விதத்திலும் மற்ற நாடுகளை விட அதிகமாக செயல்படவில்லை. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து மற்ற நாடுகளை விட விழிப்புணர்ச்சியுடன் இருக்கின்றன.
ஏனெனில் இயற்கை அளித்த வளங்களை நாங்கள் எப்போதும் பாதுகாக்கிறோம். அவைகளுக்கு மதிப்பு அளிப்பது என்பது எங்களது பாரம்பரியமான முறையில் உள்ளது. பூமித் தாயுடன் இணைந்து எங்களது வாழ்க்கை எப்போதுமே உள்ளது.
தட்பவெட்ப நிலையின் மாற்றத்தை எதிர்த்து நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவை பொறுத்தவரை 175 கிகாவாட் அளவுள்ள மேலும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்திறனை 2022 ஆம் ஆண்டுக்குள் நாங்கள் உருவாக்க உள்ளோம். இதன் மூலம் 33-35% வரையிலான மாசுகளை 2030ஆம் ஆண்டுக்குள் குறைப்போம். இதுவே எங்களது முயற்சியின் இரண்டு அம்சங்கள் ஆகும்.
தூய்மையான எரிசக்தி, நிலையான குடியிருப்புகள், பொதுமக்கள் போக்குவரத்து, விவசாயத்திற்கு உகந்த தட்பவெட்பநிலை ஆகிய பிரிவுகளில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
ஆயினும், சிலர் செய்த குறைபாடுகளால் மற்ற பலர் பாதிக்கப்படக்கூடாது என்பது உண்மையான நிலை. ஆகவே, ஐக்கியநாடுகள் சபை தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட கொள்கைகளை குறித்து சிறந்த முடிவுகளை பாரீசில் டிசம்பர் மாதம் உலகத் தலைவர்கள் கூடும்போது எடுப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்களும் இதில் சிறந்த முறையில் பங்களிக்க உள்ளோம். தூய்மையான மின்சக்தி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உலக நாடுகளின் உண்மையான நட்புறவை நாங்கள் விரும்புகிறோம். வளர்ந்து வரும் நாடுகள் அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தையும், நிதியையும் பெறுவதற்கு வழிவகை மேற்கொள்ளப்பட வேண்டும். தட்பவெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்க வேண்டும்.
சூரிய ஒளி மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயலாற்ற நான் உங்களை அழைக்கிறேன். சி.ஓ.பி. 21 மாநாடு நவம்பர் மாதம் 30ஆம் தேதி பாரிசில் நடக்க இருக்கும்போது இதை நான் துவக்க உள்ளேன். சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நம்முடைய வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில் நமது இலக்கு உள்ளது. அதன் மூலம் மின்சக்தி கிடைக்காத கிராமங்களுக்கும் மின்சக்தியை அளிக்கப்படும்.
நம்முடைய வளர்ச்சி இலக்குகளை அடையவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் உலக அளவில் வர்த்தகப் பகுதியை இந்தியாவும் ஆப்பிரிக்காவும் அமைக்க விரும்புகிறது.
டிசம்பரில் மாதத்தில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நைரோபியில் நடக்கும்போது 2001ஆம் ஆண்டு தொஹா வளர்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் நமது அடிப்படை கொள்கைகள் நிறைவேறும் வரை செயல்படுத்தப் படக்கூடாது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய முறைகளை பாதுகாப்பு போன்றவற்றிற்கான நிலையான தீர்வுகளை நாம் உருவாக்க வேண்டும்.
மேன்மைத் தாங்கியவர்களே,
ஐக்கிய நாடுகள் சபையின் 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடப்பட உள்ள தருணத்தில் நமது எதிர்காலத்திற்கான திட்டங்களையும் உருவாக்கக்கூடிய ஆண்டில் நாம் உள்ளோம். உலகில் தற்போது அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பெருத்த மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நூற்றாண்டில் நாம் எவற்றையெல்லாம் தவிர்த்து உள்ளோமோ அவற்றுக்கான காரணங்களை உலக அமைப்புகள் கூறுகின்றன. ஆயினும் தற்போது ஒன்றை மட்டும் நாம் விடவில்லை.
இந்த அமைப்புகள் நமக்கு நல்ல முறையில் சேவை செய்துள்ளன. ஆயினும் தற்போது மாறிவரும் உலகிற்கு தகுந்தபடி அந்த அமைப்புகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை எனில் அவை பயனற்றதாகிவிடும். அதற்கு பதிலாக எதிர்காலத்தில் எந்த அமைப்பு உருவாகும் என்பதை நாம் கூற இயலாது.
தற்போதைய காலகட்டத்தில் சவால்களை சந்திப்பதற்கு உரிய திறமையை பிரிவுபட்ட உலக நாடுகள் பெறவில்லை. ஆகவே தான் உலக அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
நமது உலகத்தில் பல சுதந்திர நாடுகள் விழிப்புணர்ச்சிடன் கூடிய விருப்பங்களுடன் உள்ளன. நமது உலக அமைப்புகள் ஆப்பிரிக்காவுக்காக குரல் கொடுக்கவில்லை எனில் அந்த அமைப்பு அதற்காக எந்த வகையிலும் சாதகமாக இருக்க இயலாது. ஏனெனில் உலகில் ஆறில் ஒரு பகுதி மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்கா நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கால் பங்கிற்கு மேல் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆகவேதான் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் பாதுகாப்புச் சபை உட்பட ஐக்கிய நாடுகளின் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு குரலில் கூற வேண்டும்.
மேன்மைத் தாங்கியவர்களே,
இன்று, உலகின் பல பகுதிகளில், வன்முறையும் நிலையாமையும் தொடர்ந்து இருக்கின்றன. சாலைகள், கடற்கரை ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் தீவிரவாதம் செயல்படும்போது நாம் அதன் வலியை உணர்கிறோம். இதற்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.
நமது கடல்கள் வர்த்தகத்திற்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தால் நாம் சேர்ந்தே அதில் பாதிக்கப்படுகிறோம்.
நாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
கணிணி இணையதளத்தின் மூலம் நமக்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றிலும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளன.
அகவே பாதுகாப்பு விஷயத்தில் தொலைவு என்பது முக்கியமானதாக இல்லை.
ஆகவே தான் கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தீவிரவாதத்தை எதிர்க்கவும், நமது கூட்டுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஆகவேதான், சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்க்க ஐக்கியநாடுகளின் கொள்கைகள் மிக அவசியம்.
ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் அமைதி காக்கும் முயற்சியை நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். அமைதி காக்கும் ஆப்பிரிக்கா படையினருக்கு நாங்கள் ஆபிரிக்காவில் பயிற்சி வருகிறோம். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை பற்றிய முடிவுகளை எடுக்கப்படும்போது நமது வலுவான குரல் வேண்டும்.
மேன்மைத் தாங்கியவர்களே,
நமது வாழ்க்கையை இணைப்பது முதல் வளர்த்தை ஏற்படுத்துவது வரை நமது மக்களை பாதுகாப்பது முதல் அவர்களது விருப்பங்களை நமது கூட்டுறவு எல்லை தாண்டியதாக உள்ளது.
நமது கூட்டுறவை மேலும் வலுப்படுத்த சலுகை அடிப்படையில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா கடனை அளிக்கும். தற்போதைய கடன் திட்டத்தோடுகூட மேலும் இந்த கடன் கூடுதலாக அளிக்கப்படும்.
600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நாங்கள் மானிய நிதி உதவியும் அளிக்க உள்ளது. இந்தியா-ஆப்பிரிக்கா மேம்பாட்டு நிதியமான 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா சுகாதார நிதியத்திற்கான 10 மில்லியன் அமெரிக்க டாலர்களும் இதில் அடங்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000 கல்வி உதவி தொகைகளையும் இந்தியாவில் அளிக்க உள்ளோம். ஆப்பிரிக்கா கண்டத்திற்கான கணிணி இணையதளம் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவற்றை ஆப்பிரிக்காவில் அளிப்பதற்காக நாங்கள் ஆதரவு அளிப்போம்
மேன்மைத் தாங்கியவர்களே,
இந்த நூற்றாண்டில் அனைவருக்கும் வாழ்க்கையில் வாய்ப்புகளுடனும், சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் இருப்பது, ஒருவருக்கொருவர் அமைதியாக வாழ்வது; இயற்கையோடு ஒன்றி வாழ்வது ஆகியவை கிடைக்க வேண்டுமெனில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் ஒன்றாக பணியை மேற்கொள்ளுவோம்:
நமது பொதுவான போராட்டங்களின் நினைவுகள் முதல் ஒருங்கிணைந்த நம்பிக்கையுடன்;
நமது பாரம்பரியத்தின் செழுமையுடன்; நமது பூமித்தாய்க்கான அர்ப்பணிப்புடன்;
எமது மக்களுக்கு அளித்த உறுதிமொழி முதல் அதன் மீதுள்ள நம்பிக்கை மற்றும் நமது எதிர்காலம்;
ஒரு சிறிய இல்லம் பல நண்பர்களை கொண்டிருக்கும் என்ற ஆப்பிரிக்காவின் பெருந்தன்மை;
நமது பெரியோர்களின் ஆன்மா நன்மையை மற்றவர்களுக்கு அளிக்கும் என்ற இந்தியாவின் பண்டைய நம்பிக்கை;
மற்றவர்களுக்கு சுதந்திரம் அளிக்கவும், மதிப்பு அளிக்கவும் வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற மண்டேலாவின் அழைப்பு.
இன்று, நாம் இணைந்து செயல்பட வேண்டும். நமது குரல்கள் ஒருமித்து இருக்க வேண்டும்.
இது புதிய பயணம் அல்ல. புதிய தொடக்கமும் அல்ல. நெடுங்காலமாக இருந்து வந்த நட்புறவின் அடிப்படையில் எதிர்காலத்திற்கு புதிய வாக்குறுதியை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
மேன்மைத்தாங்கிய உங்களது வருகை நமது உறுதிப்பாட்டை விளக்கும் விதமாக உள்ளது.
நன்றி! மிக்க நன்றி!!
Fabric of this world is richer because of the 54 sovereign flags of Africa: PM @narendramodi begins his speech https://t.co/Iy8hu3Nre5 #IAFS
— PMO India (@PMOIndia) October 29, 2015
We are deeply, deeply honoured by your presence today: PM @narendramodi to African leaders @indiafrica2015 #IAFS https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) October 29, 2015
It is not just a meeting of India & Africa. Today, the dreams of one-third of humanity have come together under one roof: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 29, 2015
The heart beat of 1.25 billion Indians & 1.25 billion Africans are in rhythm: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) October 29, 2015
2/3rd of India & Africa is under the age of 35. And, if the future belongs to the youth, then this century is ours to shape & build: PM
— PMO India (@PMOIndia) October 29, 2015
Africa’s economic growth has gathered momentum and has a more diversified base: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) October 29, 2015
African initiatives are replacing old fault lines with new bridges of regional economic integration: PM https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) October 29, 2015
Africa’s sports, art and music delight the entire world: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5 #IAFS @indiafrica2015
— PMO India (@PMOIndia) October 29, 2015
Africa and India are two bright spots of hope and opportunities in the global economy: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5 #IAFS
— PMO India (@PMOIndia) October 29, 2015
Technology will be a strong foundation of our partnership: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5 #IAFS @indiafrica2015
— PMO India (@PMOIndia) October 29, 2015
We will also collaborate to develop Indian and African treasures of traditional knowledge and medicines: PM @narendramodi @indiafrica2015
— PMO India (@PMOIndia) October 29, 2015
We will work to reduce digital divide within Africa and between Africa and rest of the world: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) October 29, 2015
We will also deepen India-Africa partnership on clean energy, sustainable habitats, public transport & climate resilient agriculture: PM
— PMO India (@PMOIndia) October 29, 2015
We wish to deepen our cooperation in maritime security and hydrography, and countering terrorism and extremism: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 29, 2015
We pledge to walk together, with our steps in rhythm and our voices in harmony: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 29, 2015
Today's proceedings at @indiafrica2015 got off to a great start. Dreams of 1/3rd of humanity gathered under 1 roof pic.twitter.com/Ojd6w0iTnl
— Narendra Modi (@narendramodi) October 29, 2015
We will walk together, our steps in rhythm & voices in harmony. We see a great future for this ancient relationship. https://t.co/2CDOWMQ6kz
— NarendraModi(@narendramodi) October 29, 2015