Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மார்ச் 16, 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் பயணம்


  

மார்ச் 16, 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டின் 105வது அமர்வில் பிரதமர் துவக்க உரையாற்றுவார். இந்தச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் வட கிழக்கு மண்டலத்தின் இரண்டாவது நகரம் இம்பால் ஆகும்.

லுவங்க்சங்கபமில் உள்ள லுவண்ங்போக்பா பன்முக விளையாட்டு அரங்கில் பிரதமர், தேசிய விளையாட்டுப் பல்கலைகழகம், 1000 அங்கன்வாடி மையம், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான 19 குடியிருப்பு வளாகங்கள், ராணி கைடினுலியு பூங்கா மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கற்களை நாட்டுவார். பிறகு அவர் உரையாற்றுவார்.