பி.எம்.இந்தியா
சட்டத் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின் ஏற்பு ஒப்புதல் அளித்தது உள்ளது. இது சட்டம் மற்றும் சட்டம் இயற்றல் துறையில் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள உதவும்.
இந்தியா மற்றும் மொரோக்கோ ஏற்பாடு செய்யும் கருத்தரங்கம், சிந்தனையரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் வழக்கறிஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் சட்டம் மற்றும் நீதி துறையில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி செய்யும்.
*****