பி.எம்.இந்தியா
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் 96 மாவட்டங்களில் உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட மக்கள் வசிக்கும் உள்ளடக்கப்படாத, 4072 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளை அளிப்பதற்கு யுனிவர்சல் சேவை பொறுப்பு நிதி ஆதரவுடனான திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 7,330 கோடியாக இருக்கும்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த கட்டமைப்பு பாதுகாப்பு பணியாளர்களால் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் உள்ளடக்கம் செய்யப்படாத குடியிருப்பு கிராமங்களில் உள்ள மக்கள் இந்தப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் மொபைல் சேவைகளை அளிக்கும். இது பின் தங்கிய, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இ-நிர்வாக செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் டிஜிட்டல் மொபைல் இணைப்பை அளிக்கும்.
10 மாநிலங்களில் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை:
|
1
|
ஆந்திர பிரதேசம்
|
8
|
429
|
|
2
|
பீகார்
|
8
|
412
|
|
3
|
சத்தீஸ்கர்
|
16
|
1028
|
|
4
|
ஜார்க்கண்ட்
|
21
|
1054
|
|
5
|
மத்திய பிரதேசம்
|
1
|
26
|
|
6
|
மகாராஷ்டிரா |
2
|
136
|
|
7
|
ஒடிசா
|
18
|
483
|
|
8
|
தெலங்கானா
|
14
|
118
|
|
9
|
உத்தர பிரதேசம்
|
3
|
179
|
|
10
|
மேற்கு வங்கம்
|
5
|
207
|
|
மொத்தம்
|
10 மாநிலங்கள் |
96
|
4072
|
வ.எண். |
மாநிலங்கள் |
மாவட்டங்கள் |
கோபுரங்களின் எண்ணிக்கை |
|---|
அ. இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகள் முதல் கட்ட திட்டம்
*****