பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூலை 28ஆம் தேதி, “நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைப்பது” என்ற நிகழ்வில் பங்கேற்பார். இது, நகர்ப்புற மேம்பாடு தொடர்பான அரசின் மூன்று முக்கிய செயல்பாடுகள் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்); நகர்ப்புற மாற்றத்தின் புனரமைப்புக்கான அடல் இயக்கம் (அம்ருத்); நவீன நகரங்கள் இயக்கம் தொடங்கப்பட்டதன் 3-வது ஆண்டினைக் குறிப்பதாகும்.
நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய இயக்கங்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிடுவார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) 35 பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடுவார். ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திலிருந்து ஒருவர் வீதம் இதில் பங்கேற்பார்கள்.
உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து இந்தத் திட்டத்தின் பயனாளிகளிடமிருந்து காணொலிக் காட்சி மூலம் அவர் கருத்துகளை கேட்டறிவார்.
உத்தரபிரதேசத்தில் முக்கியமான இயக்கங்களின்கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.
2018 பிப்ரவரியில் உத்தரபிரதேச அரசு முதலீட்டாளர்களை கவர்வதற்கும், தொழில்மயத்தை மேம்படுத்துவதற்கும் உ.பி முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி, அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, சுற்றுலா மற்றும் இதுபோன்ற துறைகளில் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டு விருப்பம் உருவாக இது வழிவகுத்தது.
ஒரு சில மாதங்களுக்குள் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் 81 திட்டங்களுக்கான ஆலோசனைகள் பெறப்பட்டு, அடிக்கல் நாட்டும் நிலையை தற்போது அடைந்துள்ளன. இந்தத் திட்டங்களின் தொடக்கமாக ஜூலை 29-அன்று லக்னோவில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பார்.
———–