Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் – பிரதமர் வாழ்த்து


இந்தோனேசியா, பலேம்பங் ஜகர்தாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா களத்தில் இருக்கும் போது, அவரின் சிறந்த திறனை எதிர்பார்ப்போம். இந்த இளைஞர், ஆண்கள் ஈட்டி எறிதலில் இறுதி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு மகிழ்ச்சி சேர்த்துள்ளார். புதிய தேசிய சாதனை படைத்ததிற்கும் நாங்கள் அவரை வாழ்த்துகிறோம் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.