Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரயில்வே துறையில் இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது


இந்திய ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பிற்கும், கொரிய குடியரசின் ரயில்வே ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையோன ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரயில்வே துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் எட்டப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்  2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று கையெழுத்தானது.

 

தாக்கம்

 

ரயில்வே துறையில் தற்போதைய வளர்ச்சி மற்றும் தகவல்களை கொரிய ரயில்வே துறையோடு பகிர்ந்து கொள்வதற்கு இந்திய ரயில்வே துறைக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது.  தொழில்நுட்ப நிபுணர்களின் பரிமாற்றம்,  அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்கள், குறிப்பிட்ட தொழில்நுட்ப தளங்களை மையமாகக் கொண்ட பயிற்சி, கருத்தரங்கம் / பயிலரங்கம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான கலந்துரையாடலுக்கு இது வழிவகுக்கும்.

 

விரிவு

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்க்கண்ட துறைகளில்  மையப்படுத்திய அணுகுமுறையோடு கூடிய ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பிற்கு வழிவகுக்கும்:-

 

  1. பரஸ்பர நலனுக்கான கூட்டு ஆராய்ச்சிக்கான திட்டம் மற்றும் செயலாக்கம்;
  2. இந்தியாவில் ரயில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி வசதிகளை அமைப்பதில் ஒத்துழைப்பு;
  3. தொழில்நுட்ப கருத்தரங்கம் அல்லது பேரவைக்கான திட்டம் மற்றும் செயலாக்கம்;
  4. கொரிய ரயில் ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பின் ஊழியர்களுக்கான குறுகிய கால பயிற்சி திட்டம்;
  5. சிறப்பு திட்டங்களுக்கு கொரிய ரயில்வே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு ஊழியர்களுக்கான குறுகியகால பரிமாற்ற திட்டம்;
  6. இருநாடுகளிலும் ரயில்வே துறையின் வளர்ச்சிக்கான ஆலோசனை; மற்றும்
  7. இருதரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதர ஒத்துழைப்பு நடவடிக்கைகள்.

 

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு வெளிநாட்டு அரசுகளோடும், தேசிய ரயில்வே துறையோடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதி விரைவு தடங்கள், தற்போதுள்ள தடங்களில் வேகத்தை அதிகப்படுத்துவது, உலக தரத்திலான ரயில் நிலையங்களின் வளர்ச்சி, ரயில்வே உள் கட்டமைப்பின் கனரக இழுவை இயக்கம் மற்றும் நவீன மாமயமாக்கல் ஆகிய துறைகள் ஒத்துழைப்பிற்கான தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பரஸ்பர நலனுக்கான ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் இயக்கத்தின் வளர்ச்சி, தகவல் பரிமாற்றம், தொழில்நுட்ப பார்வையிடல், பயிற்சி, கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் ஆகியவற்றில் பரிமாற்றம் மூலமாக ஒத்துழைப்பு உறுதி செய்யப்படுகிறது.

                             ******