Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் பில் கேட்ஸ் சந்திப்பு

பிரதமருடன் பில் கேட்ஸ் சந்திப்பு

பிரதமருடன் பில் கேட்ஸ் சந்திப்பு


பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் மற்றும் அறங்காவலர் திரு. பில் கேட்ஸ் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். தூய்மையான எரிசக்தி நடவடிக்கை, நிதி உள்ளடக்கம், சுகாதாரம், சத்துணவு ஆகியவைக் குறித்து இருவரும் விவாதித்தனர். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் இந்தியாவின் செயல்பாட்டை புகழ்ந்த திரு. பில் கேட்ஸ் தூய்மையான எரிசக்தியின் விலைவாசியை ஹைட்ரோ கார்பன் (பெட்ரோலியம்) அளவிற்கு குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த அடிப்படையில், நிதி உள்ளடக்கம் சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஞ்சல் துறை கட்டமைப்பை மேம்படுத்தி அதனை நாடு முழுவதும் ஹைபிரிட் பேமன்ட் வங்கிகளாக உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சுகாதாரம் குறித்து பேசுகையில் திரு. கேட்ஸ் இந்தியாவில் புதிய தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தப்பட்டதை பாராட்டினார். தூய்மையான பாரதம் இயக்கம், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

***