Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விசா வசதிகள் ஏற்படுத்தித் தர இந்தியா ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா ஈரான் இடையே, ராஜாங்க, அலுவல் ரீதியான மற்றும் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா வசதிகள் ஏற்படுத்தித் தர கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

1) இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அளிக்கும் கடிதத்தின் அடிப்படையில், அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், ராஜாங்க, அலுவல் ரீதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, 20 வேலை நாட்களுக்குள், 90 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான இலவச விசாக்களை வழங்கும். ரத்த சொந்தங்கள் மற்றும் இதர சொந்தங்களை பார்வையிட மூன்று மாதம் செல்லுபடியாகும் விசாக்களும், உரிய விசாக் கட்டணம் செலுத்திய பிறகு வழங்கப்படும்.

2) , இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்காகவோ அல்லது மாநாடுகளில் பங்கெடுப்பதற்காகவோ வருகை தரும் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மூன்று வேலை நாட்களுக்குள் நீட்டிக்க முடியாத, 15 நாட்கள் செல்லத்தக்க விசா வழங்கப்படும்.

3) சம்பந்தப்பட்ட தூதரகங்களுக்கு, நிதிப் பணி தொடர்பாகவோ, கணிணிப் பணி அல்லது தகவல் தொழில்நுட்பப் பணி தொடர்பாகவோ வருகை தரும் அதிகாரிகளுக்கு, பல முறை வந்து போகக் கூடிய, ஒவ்வொரு வருகையின்போதும் 20 நாட்கள் தங்கக் கூடிய வசதியுள்ள, மூன்று மாதம் செல்லத்தக்க விசா, 15 வேலை நாட்களுக்குள் வழங்கப்படும்.

4) சிறப்பு நிர்வாகக் காரணங்களுக்காக, தூதரகங்களில் பணியாற்றுவோருக்கு, ஒரே முறை வரக்கூடிய, மூன்று மாதம் செல்லத்தக்க விசா, 15 வேலை நாட்களுக்குள் வழங்கப்படும்.

5) சம்பந்தப்பட்ட வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் மற்றும் விசா விண்ணப்பம் கொடுத்தவுடன், ஆசிரியர்கள், மற்றும் அவர்கள் மனைவி, குழந்தைகளுக்கு, ஒரே முறை வரக்கூடிய, மூன்று மாதம் செல்லத்தக்க அலுவலக விசா 20 வேலை நாட்களுக்குள் வழங்கப்படும்.

6) இரு தரப்பும், இது குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதை பரிமாறிக் கொண்டு, இதர நடைமுறைகளை பின்பற்றிய உடன், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

7) இந்த ஒப்பந்தம் காலவரையற்ற அளவில் நடைமுறையில் இருக்கும். ஆனால் இரு தரப்பும், சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மூலமாக, 60 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்த பிறகு, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம்.

8) இரு நாடுகளும், இரு நாடுகளைச் சேர்ந்தவர்களை, சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப, வருகையை தடுக்கவோ, விசா காலத்தை குறைக்கவோ, விசாவை ரத்து செய்யவோ உரிமை உண்டு.

9) இரு தரப்பும் எழுத்துபூர்வமாக ஏற்றுக் கொண்டால், இந்த ஒப்பந்ததில் எந்த நேரம் வேண்டுமானாலும், மாறுதல்களை மேற்கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் எவ்விதமான சிக்கல்கள் எழுந்தாலும், அது இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளப் பட வேண்டும்.

***