Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடு முழுவதும் உள்ள ஆஷா, கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் பிரதமர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடியதன் தமிழாக்கம்


 

உங்கள் அனைவருடன் நேரடியாக நான் கலந்துரையாடுவது இது முதல் முயற்சியாகும். நீங்கள் அனைவரும் அமைப்பு வாரியாக என்னுடன் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டை  நிர்மானிப்பதில் ஆஷா, அங்கன்வாடி மற்றும் கிராம செவிலியர்கள், ஆகியோர் ராணுவ வீரர்கள் போன்று பணியாற்றி வருகின்றனர். ஆரோக்கியமான மகளிர் நலம், நீங்கள் இல்லாமல் ஏற்படுமா என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தாய் சேய் நலத்தை பாதுகாக்கும் கடமையை உங்கள் தோளின் மேல் மீது சுமந்து வலுப்படுத்தி வருகிறீர்கள்.  ஆரோக்கிய பாதுகாப்பு வட்டத்தில் 3 அம்சங்கள் உள்ளன.  இதில் முதலாவது சத்துணவு, இரண்டாவது தடுப்பூசிப் போட்டுக் கொள்வது, மூன்றாவது தூய்மையை பேணுவது ஆகும். மக்களுக்கு இது குறித்து தெரியாது என்பது தவறான எண்ணமாகும். இந்த அம்சங்களை முன்வைத்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறிதளவுதான் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைந்த வளமிக்க நாடுகள் எல்லாம், மக்கள் உடல்நல பாதுகாப்பில் நம்மைவிட அதிக அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். நம்மைவிட அவர்கள் மிகவும் உடல்நலத்தில் முன்னேற்றமாக உள்ளனர். இந்த பின்னடைவிலிருந்து வெளிவருவதற்காக  2014-ம் ஆண்டில் புதிய திட்டம் ஒன்றை நாம் தொடங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    இந்திரதனுஷ் இயக்கம் குறித்து  உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த இயக்கத்தின் கீழ், தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சின்னஞ்சிறிய குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாகும். நீங்கள் இந்த இயக்கத்தின் பணிகளை விரைவாக முன்னெடுத்துச் சென்று 85 லட்சத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப்பெண்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு  உதவியிருக்கிறீர்கள். இந்தியாவின் கிழக்கு பகுதி மற்றும் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி ஆகியவற்றைச் சேர்ந்த குழந்தைகள், யானைக்கால் வியாதியின் மிரட்டலை எதிர்கொண்டுள்ளனர். இது போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதற்காக ஐந்து புதிய தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஜப்பான் யானைக்கால் நோயைத் தடுக்கும் தடுப்பூசி ஒன்றும் இதில் அடங்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமரின் சுரக்ஷித் மட்ரிட்வா அபியான் என்ற  திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களின் பங்கு அளப்பறியது.  நீங்கள் அனைவரும் எனது கூட்டாளிகள்.  கடவுள் ஒருவருக்குத்தான் ஆயிரம் கரங்கள் உள்ளன என்று முன்னர் சொல்லப்பட்டது. உண்மையில், ஆயிரம் கரங்களை ஒன்று சேர்க்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால், அவரது குழுவில் 500 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் கடவுளுக்கு உதவிக்கரங்களாக செயல்படுகின்றனர். இன்று தமக்கு ஆயிரம் கரங்களுக்கு பதிலாக லட்சக்கணக்கான கரங்கள் உள்ளதாக நாட்டின் பிரதமர் சொல்ல முடியும்.  நண்பர்களே,  நீங்கள் அனைவரும் எனது கரங்கள்தான்.

     நண்பர்களே, சுகாதாரமும், ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று நேரடியாக பின்னிப்பினைந்துள்ளன. சத்துணவு என்பது நாம் எதைச் சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பொறுத்ததாகும். தூய்மையும், தடுப்பூசியும், அவசியமானதாகும். இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது, பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் என்பதை உணர்ந்து கொள்வதில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். திருமணம் செய்து கொள்வதும், குழந்தைபேறும் சரியான வயதில் நிகழ வேண்டும். உரிய வயதிற்கு முன்னர் கர்ப்பம் அடைவது, தாய்-சேய் நலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

    உணவு உடகொள்வதற்கு முன்னால் கைகளை எப்படி சுத்தம் செய்வது? இது போன்ற பல செயல்கள் சத்துணவோடு இணைந்துள்ளது. இதை மனதில் நிறுத்தி தேசிய சத்துணவு இயக்கம் ராஜஸ்தானில் ஜுன்ஜூனு நகரில் இந்தாண்டு துவங்கப்பட்டது.  இது மிகவும் வரவேற்கத்தக்க இயக்கமாகும். இது மிகவும் சவாலானது என்றாலும், எனக்கு மட்டும் உள்ள சவாலாக இதை நான் ஏற்கவில்லை. இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வது உங்கள் மீது உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நீங்கள் உங்களுடைய பொறுப்புணர்வை நிரூபித்து இருக்கிறீர்கள். மீண்டும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். இந்த நம்பிக்கையின் காரணமாக  இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறோம். அனைவருக்கும் உணவு என்ற இயக்கத்தின்  நோக்கங்கள்  அனைவருக்கும் சென்றடைவதில் வெற்றி பெற வேண்டும் என்றால்  லட்சக்கணக்கான தாய், சேய் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இது புதிய உத்வேகத்தை அளிக்கும்.

     சில நேரங்களில் தண்ணீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாக நாம் கேள்விப்படுகிறோம், அந்த நபர் அவருடைய கிராமத்தில் பிரபலமாகிவிடுகிறார்.  சில நேரங்களில் அந்த நபர், ரயில்விபத்திலிருந்து மற்றொருவரை காப்பாற்றியதாக நாம் கேள்வி படுகிறோம். அனைத்துத் தொலைக்காட்சிகளும்,  பத்திரிகைகளும், இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. என்றாலும் நீங்கள் உங்களுடைய அயராத பணியால் தினமும், சிறிய மற்றும் அப்பாவி குழந்தைகளின் உயிரை ஒவ்வொரு நாளும் காப்பாற்றி வருகிறீர்கள். ஒரு மருத்துவர் தொற்று நோயிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறார். ஆனால் சில நேரங்களில் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அதிகமான அளவில்  உயிர்களை காப்பாற்றி வருவதாக சில நேரங்களில் நான் உணர்கிறேன்.

    சத்துணவு மாதம் வெற்றிகரமாக செயலாக்கம் பெறுவதில் கடுமையாக ஈடுபட்டுள்ள 24 லட்சம் பணியாளர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்கு உங்களில் மேலான  ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்பதற்கு நான் ஆர்வமாக உள்ளேன்.  நாடு முழுவதும் உள்ள மக்கள் உங்களின் அயராத பணியைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான இதர சகோதரிகளும், பணியாளர்களும் உங்களின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வார்கள்.  அதனால் தான்  உங்களின் கருத்துகளை  கேட்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்.