Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு மாநாட்டில் பிரதமர் உரை


டெல்லியில் நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் நடத்தும் தலைமைப்பண்பு மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.

இந்திய பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா பயணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலை, உலகின் பார்வையிலும், இந்தியா சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதையும் வைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்து தனது திட்டங்களை விவரித்த பிரதமர், சமீப 7.5 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம், மற்றும் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ளிட்ட, சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வெற்றிகள் என்று குறிப்பிடடார். தொழில் தொடங்க ஏதுவான சூழல், மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் மட்டுமே முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

நேரடி எரிவாயு மானியம் மற்றும் எல்.இ.டி விளக்குத் திட்டங்கள் ஆகியன எப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்துள்ளன என்று குறிப்பிட்டார். யூரியாவின் மீது வேம்பு பூச்சு, விவசாயத்துக்கான யூரியாவை வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடுத்துள்ளது என்று கூறினார். பீகாரில் உள்ள இரண்டு ரயில்வே கோச்சுகள் தயாரிக்கும் நிறுவனங்களில், வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.

இன்னும் மின்சாரம் கிடைக்காத இந்தியாவின் 18,000 கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், கிராமீன் வித்யூதிகாரன் அப்ளிகேசனை பயன்படுத்தி, இதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம் என்றார்.

*****