Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாக்ரன் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் உரை

ஜாக்ரன் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் உரை

ஜாக்ரன் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் உரை


ஜாக்ரன் பிரகாஷன் தனியார் நிறுவனம் புது தில்லியில் நடத்திய ஜாக்ரன் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.

“நித்திய விழிப்புணர்வு, விடுதலையின் விலை” என்ற மேற்கோளை குறிப்பிட்டு பிரதமர், ஜனநாயகத்தில் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். ஒரு சிறந்த ஜனநாயகத்துக்கு மக்களின் பங்கேற்பு அவசியம் என்று குறிப்பிட்டார் பிரதமர். சுதந்திரப் போராட்டத்தை மகாத்மா காந்தி எப்படி மக்கள் இயக்கமாக மாற்றினார் என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த மக்கள் இயக்கம், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

சுதந்திரத்துக்கு முன்பாக சட்டங்கள் உருவாக்கப்படுகையில், மக்களை நம்பக் கூடாது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்றார்.

ஆவணங்களுக்கு சுய சான்று, ஸ்வச் பாரத் திட்டத்தில் மக்களின் பங்கேற்பு, தானாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுத் தருதல் போன்றவை உதாரணங்கள் என்றார் பிரதமர்.

பிரதம மந்திரி முத்ரா யோஜ்னா மற்றும் தொடங்கிடு அப் இந்தியா, நிமிர்ந்திடு இந்தியா போன்ற திட்டங்கள் எத்தகையதொரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதை பிரதமர் விளக்கினார்.

“குறைந்த தலையீடு கொண்ட அரசு, நிறைந்த நிர்வாகம்” என்ற அணுகுமுறையை குறிப்பிட்ட பிரதமர், பழங்காலச் சட்டங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன என்றார்.