பி.எம்.இந்தியா
மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ஷீரிடிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 அக்டோபர் 19 அன்று வருகை தரவுள்ளார்.
ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் துவங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார். அப்போது ஸ்ரீ சாய்பாபா சமாதி அடைந்த நூற்றாண்டை குறிக்கும் வகையில் சிறப்பு வெள்ளிக்காசு ஒன்றையும் அவர் வெளியிடவுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான புகுமனை புகுவிழா பொது நிகழ்ச்சியில் கலந்து பொள்ளும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கிய பிறகு அவர் மக்களிடையே உரையாற்றுவார்.
ஸ்ரீ சாய்பாபா சமாதி அமைந்துள்ள கோயில் வளாகத்திற்கும் பிரதமர் வருகை தரவுள்ளார்.