பி.எம்.இந்தியா
செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஐ, பி.எஸ்.எஸ்.எல்.வி. சி-31 ஏவுகணை மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஆற்றலுக்கும் உறுதிப்பாட்டுக்கும், செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஐ, பி.எஸ்.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதற்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு இந்த வெற்றியை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து நமக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் என்றும் பிரதமர் டுவிட்டர் வலையதளத்தில் கூறியுள்ளார்.
Congratulating the dynamism & determination of @isro & our scientists on successful launch of PSLV C31 & putting IRNSS 1E in orbit precisely
— Narendra Modi (@narendramodi) January 20, 2016
Spoke to the scientists at @isro & congratulated them on their accomplishment today. Our scientists keep making us proud.
— Narendra Modi (@narendramodi) January 20, 2016