Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் இந்தியா – பிரான்ஸ் தொழில் மாநாடு. 16 ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.

சண்டிகரில்  இந்தியா – பிரான்ஸ் தொழில் மாநாடு.  16 ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.

சண்டிகரில்  இந்தியா – பிரான்ஸ் தொழில் மாநாடு.  16 ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.

சண்டிகரில்  இந்தியா – பிரான்ஸ் தொழில் மாநாடு.  16 ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.


சண்டிகரில் இன்று நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் தொழில் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.

சி.ஓ.பி.-21 பேச்சுவார்த்தைகளை நடத்திய விதத்துக்காக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அதிபர் ஹாலாண்டே, தன்னிடம் தொலைபேசியில் பேசி, வெளியிடப்பட உள்ள ஒப்பந்தத்தின் சாராம்சம் குறித்து ஒப்பந்தம் வெளியிடப்படும் முன் விவாதித்ததாக பிரதமர் தெரிவித்தார்.

காப் 21 மாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அடிப்படைக் கொள்கைகளில் இருந்து வழுவாமல், தீவிரவாதத்தை எதிர்ப்பது குறித்த பிரான்ஸ் நாட்டின் முறைகளை பாராட்டினார். தீவிரவாதத்துக்கு எதிரான பிரான்ஸ் நாட்டின் போரில், இந்தியா பிரான்ஸ் நாட்டோடு தோள் நிற்கும் என்றார்.

இந்தியா பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு குறித்து பேசிய பிரதமர், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உருவானவை என்றார். பாதுகாப்புத் துறை தொடர்பாக பேசிய பிரதமர், இந்தியாவின் திறமையும், பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு தொழில்நுட்பமும் இணைந்து உலகை ஒரு பாதுகாப்பான இடமாக உருவாக்க முடியும் என்றார். இணைய பாதுகாப்பு குறித்தும் பிரதமர் பேசினார்.

பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்றார் பிரதமர். முன்கூட்டிய வரிவிதிப்பு முடிந்துபோன அத்தியாயம் என்றார். புதிய திட்டங்களுக்கான யோசனை, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மற்றும் சர்வதேச சூரிய ஒளிக் கூட்டணியை உள்ளடக்கியது என்றார் பிரதமர்.

16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அந்த மாநாட்டில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

***