Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


ஐ.சி.டி. அடிப்படையிலான பல்முனை நிர்வாக திட்டம் மற்றும் குறித்த நேரத்தில் செயல்படுத்துவதற்கான திட்டமாகிய பிரகதியின் 9வது கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமை தாங்கினார்.

சுங்கவரி மற்றும் கலால் வரித் துறை குறித்து வரும் பல்வேறு புகார்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பொது மக்களோடு தொடர்பு இருக்கக் கூடிய துறைகளின் செயலாளர்கள், குறைகளை கேட்டறிய உயர்நிலைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்றைய ஆய்வில், பிரதமர், சாலைப் போக்குவரத்து, நிலக்கரி, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆகிய துறைகளில், மகாராஷ்டிரா, அரியானா, உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மும்பை துறைமுக இணைப்பு, டெல்லி மும்பை தொழிற் பாதை, அலகாபாத் முதல் ஹல்தியா வரை, ஜல் மார்க் திட்டம் ஆகிய திட்டங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்ட திட்டங்களில் சில.

உஜ்வால் டிஸ்காம் உறுதி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் பிரதமர் ஆய்வு செய்தார்.

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், அனைவருக்கும் உரிய நேரத்தில் பலன்கள் கிடைக்குமாறு செய்வது அவசியம் என்று கூறினார்.

***