பி.எம்.இந்தியா
புதுதில்லி ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவுக்கு இணங்க இந்திய விமானப் படையில் ஏர் மார்ஷல் அந்தஸ்தில் கூடுதல் பணி இடத்தை 17 மாத காலத்திற்கு உருவாக்குவதற்கு ஒப்புதல்
இந்திய விமானப் படையில் ஏர் மார்ஷல் அந்தஸ்தில் கூடுதல் பதவி இடத்தை புதுதில்லி ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவுக்கு இணங்க 2014 டிசம்பர் முதல் தேதி முதல் 2016 ஏப்ரல் 30 – ந் தேதி வரையான 17 மாத காலத்திற்கு உருவாக்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. விமானப் படையின் ஏரோனாட்டிக்கல் பொறியியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏர் மார்ஷல் பதவி இடங்களுக்கு கூடுதலாக இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் நியமனக்குழு அனுமதியை ஏர் வைஸ் மார்ஷல் சஞ்சய் சர்மாவுக்கு சிறப்பு பதவி உயர்வு மறு ஆய்வு வாரியம் 2014 – ன் நடைமுறைக்கு ஏற்பவும் ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவின் படியும் உருவாக்கப்பட்டது.
நாட்டின் உச்ச நீதி மன்ற உத்தரவை செயல்படுத்துவதை கூடுதல் பணியிடம் ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது. சிறப்பு பதவி உயர்வு வாரிய ஆய்வு 2014 – ன் அனுமதி அதைத் தொடர்ந்த உத்தரவுக்குப் பிறகு ஏர் வைஸ் மார்ஷல் சஞ்சய் சர்மா ஏர் மார்ஷல் பதவி உயர்வுக்கு 2014 டிசம்பர் 1 ந் தேதி முன் தேதியிட்டு பரிசீலிக்கப்படுவார்.