Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துடிப்புமிக்க குஜராத் மாநாடு 2019 (ஜனவரி 17-19, 2019)-ல் பங்கேற்க மால்டா பிரதமர் இந்தியா வருகை


2019 ஜனவரி 17-19 வரை நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் மாநாடு 2019-ல் பங்கேற்பதற்காக மால்டா பிரதமர் டாக்டர் ஜோசஃப் மஸ்கட் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருடன், அந்நாட்டு பொருளாதாரம், முதலீடு மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் டாக்டர் கிறிஸ்டியன் கார்டோனா, அந்த அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மற்றும் தொழில்துறை குழுவினரும் வந்துள்ளனர். மால்டா பிரதமர் மற்றும் அவரது குழுவினரை குஜராத் ஆளுநர் திரு ஓ.பி.கோலி, வரவேற்றார்.

மாநாட்டின் இடையே, மால்டா பிரதமர் திரு. மஸ்கட், பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய குடியரசு துணைத் தலைவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த அந்நாட்டுப் பிரதமர், இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர பயணங்கள் மற்றும் இருதரப்பு நட்புறவு வலுப்பட்டு வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார். வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர்.

இந்திய மருந்து தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில் துறையினர், தங்களது தொழில்களுக்கான ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையாக மால்டாவை பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு மால்டா பிரதமர் அழைப்பு விடுத்தார். செயற்கை புலனாய்வு, கருப்புச் சங்கிலி மற்றும் நிதி தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் மால்டாவுடன் ஒத்துழைக்குமாறும் இந்தியாவிற்கு அவர் அழைப்பு விடுத்தார். கருப்புச்சங்கிலி தொழில்நுட்பம் தொடர்பாக மால்டா அரசு முறையான சட்ட நடைமுறைகளை கொண்டு வந்திருப்பதாகவும், அதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்காணிப்பாளர்களாக பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மால்டா தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, குஜராத்தில் உள்ள தடயவியல் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிப்பது போன்ற கல்வி ரீதியான ஒத்துழைப்புகளில் பெருமளவில் பங்கேற்க வருமாறு மால்டாவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். நீடித்த மற்றும் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முன்முயற்சிகளுக்கு இருதலைவர்களும் பாராட்டுத் தெரிவித்ததுடன், சூரியசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, சூரிய மின்சக்தியை முழு அளவிற்கு பயன்படுத்திக் கொள்வதில் ஒத்துழைக்கவும் உறுதிபூண்டனர்.

தமது இந்தப் பயணத்தின் போது, துடிப்புமிக்க குஜராத் மாநாடு 2019-ல் பங்கேற்ற மஸ்கட் பிரதமர், குஜராத் முதலமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

***