பி.எம்.இந்தியா
விண்வெளியை அமைதிக்காகப் பயன்படுத்துதல், விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான இந்தியா – இந்தோனேஷியா இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தம் 2018 மே மாதம் 30-ம் தேதி ஜகர்த்தாவில் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.
விவரங்கள்:
தாக்கம்:
இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தக் கட்டமைப்பு உடன்பாடு உதவும். இந்த உடன்பாடு இந்தோனேஷியாவில் இஸ்ரோவின் டிடிசி நிலையம் மற்றும் ஐஆர்ஐஎம்எஸ் நிலையம் ஆகியவற்றை அமைக்க உதவும்
பின்னணி:
2018 ஏப்ரல் 23 – 26 இடையே ஜகர்த்தாவில் நடைபெற்ற இந்தியா –இந்தோனேஷியாவுக்கு இடையிலான கூட்டத்தில் விண்வெளியை அமைதிப் பணிகளுக்காகப் பயன்படுத்துவது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான பரஸ்பரம் ஏற்புடைய ஒப்பந்தத்தின் முன்வடிவை உருவாக்க இஸ்ரோவும், லபானும் பேச்சுவார்த்தைகள் நடத்தின. தேவையான ஒப்புதல்களை வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பெற்ற பிறகு இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2018 மே மாதம் 30-ம் தேதி இந்தோனேஷியாவில் பயணம் மேற்கொண்ட போது கையெழுத்திடப்பட்டது.