Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – நார்வே கடல்சார் பேச்சு வார்த்தை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா-நார்வே இடையே கடல்சார் பேச்சு வார்த்தை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பலன்கள்:

இருநாடுகளும் நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும். நீலப்பொருளாதாரத் துறையில் சர்வதேச அளவில் முன்னணி நாடாக விளங்கும் நார்வே, மீன்பிடிப்பு, ஹைட்ரோ கார்பன், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி, கடல்சார் வளங்களை பாதுகாப்பது, மற்றும் கடல்சார் போக்குவரத்து ஆகிய துறைகளில் நவீன தொழில்நுட்பங்களையும், நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளது.

***