பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இன்று, ஐ.சி.டி. அடிப்படையிலான பல்முனை நிர்வாகம் மற்றும் குறித்த நேரத்தில் செயல்படுத்துவது தொடர்பான பிரகதி கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான குறைகளை கேட்டறிந்த பிரதமர், அக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரவை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்றைய ஆய்வில், தில்லி, சண்டிகர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், உத்தராகாண்ட், மிசோராம், ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும், சாலைப்போக்குவரத்து, ரயில்வே, நிலக்கரி, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார்.
உத்தராகாண்டில் சார்-தாம் சாலை இணைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், அத்திட்டத்தை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
ரயில்வே நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதமர் கேட்டறிந்தார். ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளரும், தமது மாநிலத்தில் குறைந்தது ஒரு ரயில்வே நிலைய வளர்ச்சித் திட்டத்திலாவது கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். மேம்படுத்தப்பட்ட ரயில்வே நிலையங்கள், அடையாளங்களாக மாறி, பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் என்றார் பிரதமர்.
தேசிய ஆடை வடிவமைப்பு நிலையங்களின் வளாகங்களை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை ஆய்வு செய்த பிரதமர், அத்துடன், அரசு அலுவலகங்களை சூரிய ஒளி மின்சக்தி க்ரிட் இணைப்பு மூலம் இணைப்பது, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தளவாட தொழிற்சாலைகளை இணைப்பது ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள சூரிய ஒளி மின் திட்டங்களை விரைவு படுத்துமாறு தலைமைச் செயலாளர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.
காலா ஆஸார் நோய் ஒழிப்புத் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், அந்நோயை ஒழிக்க தீவிர முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கூறினார். குழந்தைகளுக்கு நோய் தடுப்பு வழங்கும் இந்திர தனுஷ் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், அனைத்து குழந்தைகளுக்கும் இத்திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் பயனளிக்குமாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Today's PRAGATI session was extensive. We discussed infra projects, Mission Indradhanush, upgradation of NIFT campuses & other issues.
— Narendra Modi (@narendramodi) February 17, 2016
Discussed comprehensive re-development of railway stations. We want to make our stations iconic structures & centres of economic activities.
— Narendra Modi (@narendramodi) February 17, 2016
Also called for expediting work on the Char-Dham road connectivity improvement project in Uttarakhand. https://t.co/Z18lG3benQ
— Narendra Modi (@narendramodi) February 17, 2016