Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.


“பெண்கள் வழிநடத்தும் முன்னேற்றம்” என்பதன் முக்கியத்துவம் குறித்து நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.

“பெண்களின் முன்னேற்றம்” என்பதை கடந்து “பெண்கள் வழிநடத்தும் முன்னேற்றம்” என்பதை நோக்கி சிந்திக்க வேண்டும் என்றார் பிரதமர்.

இப்படியொரு மாநாட்டை நடத்திய சபாநாயகர் திருமதி. சுமித்ரா மகாஜன் அவர்களின் தலைமைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இது போன்ற மாநாடுகளில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பகிரப்படும் விஷயங்களை விட, பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அதிக பயன்தரும் என்றார்.

இன்றைய நவீன மேலாண்மைக்கு அவசியமாக கருதப்படும் பன்முகத் திறமை, பெண்களுக்கு இயல்பாக வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பெண் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மக்களோடு இணைந்து செயல்பட தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது தொடர்பாக தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரதமர், MyGov என்ற இணையதளம் மூலமாக பல்வேறு சிந்தனைகளும், கருத்துக்களும் வருகின்றன என்று குறிப்பிட்டார்.

***