Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் மங்கோலியாவின் ஆட்சிப்பணி குழுவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் மங்கோலியாவின் ஆட்சிப்பணி குழுவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மங்கோலிய ஆட்சிப்பணிக்குழுவிற்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் இடையே தற்போதுள்ள உறவுகளை வலுப்படுத்தும். ஆள்சேர்ப்பு தளத்தில் இருதரப்பினரும் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இது வழிவகுக்கும்.

****