பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஐதராபாதில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் (சுமார் 200 மீ) உள்ளிட்ட பத்து ஏக்கர் நிலத்தில், 372 சதுர அடி நிலத்தை, ஆரச்சாலை எண்.30 மேம்பாட்டுப் பணிகளுக்காக தெலங்கானா அரசு கட்டணம் ஏதுமின்றி கையகப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த இடத்தில் அமைக்கப்பட உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் உயர் சிறப்பு மையத்திற்கு, விரிவுப்படுத்தப்பட்ட சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும்.