Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்


குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் புயலினால் நிகழ்ந்த உயிர் இழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பெரும் துயரத்தை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். அலுவலர்கள் தற்போதைய சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அளிக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.