பி.எம்.இந்தியா
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியை பூடான் பிரதமர் லான்சென் டாக்டர் லோடே ஷேரிங் நேற்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்தியாவில் வலுவான தலைமையை வழங்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியை பாராட்டிய பிரதமர் டாக்டர் லோடே ஷேரிங், அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமையின் கீழ் இந்தியா பல வெற்றிகளை சாதித்திருப்பதாகவும் இன்னமும் சாதிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் டாக்டர் லோடே ஷேரிங்கின் வாழ்த்துக்களுக்காக பிரதமர் திரு மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இருநாடுகளுக்கு இடையேயான நமது சிறப்பு மற்றும் தன்னிகரற்ற இருதரப்பு உறவை மேலும் ஆழமாக்குவதற்கும், வலுப்படுத்துவதற்கும் பிரதமர் டாக்டர் லோடே ஷேரிங் மற்றும் பூடான் அரசாட்சியோடு தொடர்ந்து பணியாற்ற தமது உறுதியை அவர் வலியுறுத்தினார்.
—
ஆ ரவி/எல்கே/கீதா
I thank you for your warm greetings.
— Narendra Modi (@narendramodi) May 23, 2019
Bhutan and India share close and special bilateral ties.
I look forward to continue working with you, for further strengthening our ties, to the mutual benefit of our two countries and people. https://t.co/bBFFSKuPOv