Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் புரட்சியாளர் சந்திர சேகர் ஆசாத் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்


இந்தியாவின் புரட்சியாளர் சந்திர சேகர ஆசாத் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

“பாரதத் தாயின் வீரமிக்க தவப்புதல்வரான சந்திர சேகர் ஆசாத்-தின் பிறந்தநாளில், அவருக்கு எனது பணிவான மரியாதையை உரித்தாக்குகிறேன். மன உறுதி படைத்த தைரியசாலியாக திகழ்ந்த அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார். அவரது வீரம், நாட்டு மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

**********