Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளா தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது; பிரதமர்


கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த எதிர்பாரா துயர சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நேரில் பார்வையிட பிரதமர் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கொல்லத்தில் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடமும் எனது பிரார்த்தனைகள் காயமடைந்தோர் குடும்பத்தினரிமும் உள்ளது.

கொல்லம் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசினேன். மிக மோசமாக காயம் அடைந்தோரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

எனது அமைச்சரவை நண்பர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருமான திரு ஜெ. பி. நட்டாவை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைவாக வந்தடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

எதிர்பாரா துயர சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கண்காணிக்க நான் கேரளாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***