Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சி.எஸ்.ஐ.ஆர். சமூகத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

சி.எஸ்.ஐ.ஆர். சமூகத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை


அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர். சமூகத்தினருடன் பிரதமர் மோடி ஏப்ரல் 6—ம் தேதி புதுதில்லியில் ஆலோசனை நடத்தினார்.

தேசிய அளவிலான சவால்கள் மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.

சி.எஸ்.ஐ.ஆர் உறுப்பினர்கள் சோதனைக்கூடங்களின் ஆராய்ச்சியின் தற்போதைய நிலைமை மற்றும் திறன் குறித்து எடுத்துரைத்தார்கள். ஆய்வுக்கூட ஆராய்ச்சிகள் வர்த்தக நோக்கில் பயன்படுவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் வலியுறுத்தினார்கள். மருத்துவ கருவிகள் உற்பத்தி, எரிசக்தி, மற்றும் கழிவுகள் மேலாண்மை போன்ற சி.எஸ்.ஐ.ஆர் முக்கிய பங்காற்றும் துறைகள் தொடர்பாக அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், சி.எஸ்.ஐ.ஆரின் செயல்பாடுகள்குறித்து மதிப்பிடுவதற்கான அளவீடுகள் தேவை என்று வலியுறுத்தினார். சி.எஸ்.ஐ.ஆரின் பல்வேறு ஆய்வகங்களுக்கு இடையே உள்நாட்டு அளவில் போட்டிச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளில் குறைந்தது 100 பிரச்னைகளை சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானிகள் சமுதாயம் பட்டியலிட்டு, அதை தொழில்நுட்பரீதியாக தீர்ப்பதற்கு காலவரம்பு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.
பழங்குடியின மக்கள் மத்தியில் காணப்படும் ஒருவகை ரத்தசோகை குறைபாடு, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, ராணுவ வீரர்கள் உயிர் காக்கும் கருவிகள், சூரிய மின்சக்தி தொடர்பான கண்டுபிடிப்புகள், வேளாண்துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் போன்ற முக்கியமான துறைகளில் சி.எஸ்.ஐ.ஆர் முன்னெடுத்துச்சென்று முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

சமூகத்தின் நலிந்த பிரிவினர் ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்ககூடிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் சிறப்பான நிலையை கொண்டுவருவதற்கான பணியில் சி.எஸ்.ஐ.ஆர் ஈடுபடுவதை பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

•••••