Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளையொட்டி பிரதமர் வாழ்த்து


பைசாகி, வைசாகாதி, மாசாதி, போஹாக் பிஹூ, பொய்லா பொய்ஷாக், விஷூ, மகா விஷூபா சங்கராந்தி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகின்றன. இந்த பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இப்பண்டிகைகள் மனித இனத்திற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் புத்தாண்டு மக்களின் கனவுகளுக்கு, குறிப்பாக இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகளித்து நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.