பி.எம்.இந்தியா
சட்டத் துறை நிபுணரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ராம் ஜேத்மலானி அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
“திரு. ராம் ஜேத்மலானியின் மறைவைத் தொடர்ந்து நாடு மிகச் சிறந்த ஒரு வழக்கறிஞரையும் பொதுவாழ்க்கையில் தனித்துவம் மிக்கதொரு நபரையும் இழந்து நிற்கிறது; நீதிமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி, மிகவும் செறிவான பங்களிப்பை செய்தவர் அவர். துணிவும் பேச்சுத் திறனும் மிக்க அவர் எந்தவொரு விஷயம் குறித்தும் தனது கருத்தைத் தெரிவிப்பதற்குத் தயங்கியதே இல்லை.
“திரு. ராம் ஜேத்மலானியின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று தன் மனதில் படுவதை தெளிவாக வெளிப்படுத்தும் திறமையே ஆகும். அதை அவர் எந்தவித அச்சமும் இன்றிப் பயன்படுத்தினார். அவசர நிலையின் இருண்ட நாட்களில் அவர் வெளிப்படுத்திய மனவுறுதியும், மக்களின் உரிமைகளுக்கான அவரின் போராட்டமும் எப்போதும் நினைவில் நிற்பவை. தேவைப்படுவோருக்கு உதவி செய்வது என்பது அவரது தனித்தன்மையில் பின்னிப் பிணைந்த ஓர் அம்சமாகும்.
“ திரு. ராம் ஜேத்மலானி அவர்களுடன் உரையாடுவதற்கான எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றதற்கான நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இத்தகைய துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இங்கே இல்லாவிட்டாலும் அவரது முன்னோடியான பணிகள் தொடர்ந்து நீடித்து இருக்கும். ஓம் சாந்தி” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
In the passing away of Shri Ram Jethmalani Ji, India has lost an exceptional lawyer and iconic public figure who made rich contributions both in the Court and Parliament. He was witty, courageous and never shied away from boldly expressing himself on any subject. pic.twitter.com/8fItp9RyTk
— Narendra Modi (@narendramodi) September 8, 2019
One of the best aspects of Shri Ram Jethmalani Ji was the ability to speak his mind. And, he did so without any fear. During the dark days of the Emergency, his fortitude and fight for public liberties will be remembered. Helping the needy was an integral part of his persona.
— Narendra Modi (@narendramodi) September 8, 2019
I consider myself fortunate to have got numerous opportunities to interact with Shri Ram Jethmalani Ji. In these sad moments, my condolences to his family, friends and many admirers. He may not be here but his pioneering work will live on! Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 8, 2019
PM @narendramodi paid tributes to late Shri Ram Jethmalani Ji at his residence. He expressed condolences to the family members of Shri Jethmalani. pic.twitter.com/Dlvr0HwIeX
— PMO India (@PMOIndia) September 8, 2019