Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜமுந்திரியிலுள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் 21.93 ஏக்கர் நிலத்தை ஐதராபாத்திலுள்ள ஆச்சார்யா என். ஜி. ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ராஜமுந்திரியில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கென மாற்றிக் கொடுத்தல்


ராஜமுந்திரியிலுள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் 21.93 ஏக்கர் நிலத்தை ஐதராபாத்திலுள்ள ஆச்சார்யா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ராஜமுந்திரியில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கென 50 ஆண்டுகளுக்கான நீண்ட நாள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

பின்னணி

ஆச்சார்யா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் 2008-2009 கல்வியாண்டில் புதிய வேளாண் கல்லூரி ஒன்றை அமைத்து வேளாண் பட்டதாரிகள் கோதாவரி டெல்டா சார்ந்த உயர் வேளாண் அறிவுத்திறனைப் பெறுவதற்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்தது. தற்போது இந்த வேளாண் கல்லூரி உள்ளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SKVT கல்லூரி) வளாகத்தில் வாடகை இடத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நில மாற்றத்திற்குப் பிறகு இந்தக் கல்லூரிக்கு தனக்கே சொந்தமான நிரந்தர வளாகம் ஏற்படுத்தப்படும். ராஜமுந்திரியில் புதிய வேளாண் கல்லூரி அமைக்கப்படுவதன் மூலம் கோதாவரி டெல்டா பகுதியில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் மேம்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை அதன் கடமைகளில் ஒன்றான கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை நிறைவு செய்யவும் உதவும்.


******