Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமரின் உரை

முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமரின் உரை


புதுதில்லியில் இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நீதித்துறையில் சாதாரண மனிதர் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் நீதியரசர் தனது உரையில், இந்தியாவின் பல்வேறு நீதி மன்றங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையிலுள்ளன என்று கூறினார். இதை அடுத்து பிரதமர், தலைமை நீதி அரசரின் கவலையை புரிந்து கொள்வதாக தெரிவித்த அவர், இப்பிரச்சினைகளுக்கு அரசும் நீதித்துறையும் ஒருங்கிணைந்து தீர்வு கண்டறியும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.

சட்டப் புத்தகங்களில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுவதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

***