Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி எஸ் ஏ ட்டி – 11 விண்கலத்திற்கான தரைப்பகுதி பணிகளை நிறைவேற்றவும், விண்ணில் ஏவுவதற்கான சேவைகளைப் பெறவும் மத்திய அமைச்சரவை அனுமதி


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ரூ. 1117 கோடி மதிப்பில் ஜி எஸ் ஏ ட்டி -11 விண்கலத்திற்கான தரைப்பகுதி பணிகளை நிறைவேற்றவும் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான சேவைகளைப் பெறவும் இன்று தனது ஒப்புதலை அளித்தது.

ஜி.எஸ்.ஏ.ட்டி.-11 விண்கலம் 2016ஆம் ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்படுவதற்குத் தயாராக இருக்கும். இந்த விண்கலம் பூமியிலிருந்து செலுத்தப்படும் நேரத்தில் 5600 கிலோ அடர்த்தியைக் கொண்டதாக உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படவுள்ள செலுத்தும் கலத்தைப் பயன்படுத்தி இந்தத் துணைக்கோள் விண்ணில் ஏவப்படும். இந்தத் துணைக் கோளின் தரைப்பகுதியானது கிராமப்புற தகவல் தொடர்பு தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கும். இந்த ஏற்பாடு ஜி எஸ் ஏ ட்டி விண்கலத்தை விரைவில் விண்ணில் செலுத்த உதவும். இதன் மூலம் கு-அலைவரிசையின் திறனளவை மேலும் அதிகரிக்க முடியும். விசாட்ஸ்(VSATS), அகண்ட அலைவரிசை (Broadband) போன்ற பல சேவைகளுக்கு இந்த கு-அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள முடியும். துணைக் கோளின் சுற்றுவட்டம் குறித்த சோதனைக்கு உதவுவதோடு, இந்த அலைவரிசையின் ஒரு சிறிய பகுதியானது சமூக சேவைகளுக்குத் தேவையான அலைவரிசையை வழங்குவதாகவும் இந்த ஜி எஸ் ஏ ட்டி-11 விண்கலத்தின் தரைப்பகுதிப் பிரிவு செயல்படும். ஒரு நொடிக்கு 10 ஜிபி வேகத்திறன் கொண்ட அகண்ட அலைவரிசை தொடர்பை, குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில், தொடர்ந்து வழங்கவும், இது உதவி செய்யும்.

பின்னணித் தகவல்:

உயர் அலைவரிசை கொண்ட வி.எஸ்.ஏ.ட்டி. தகவல் தொடர்பு வழங்க ஏதுவாக உயர்திறன் கொண்ட 32 நிலையான ஒளிக்கற்றைகளுடன் கூடிய ஜி.எஸ்.ஏ.ட்டி-11 செயற்கைக் கோள் மத்திய அறிவியல் துறை மற்றும் இஸ்ரோ ஆகியவற்றின் செயற்கூடங்களில் தற்போது தயாராகி வருகிறது.