Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பங்குச்சந்தைகள் கண்காணிப்பு ஆணையம் மற்றும் அபுதாபியின் நிதி ஒழுங்குமுறை ஆணையம் இடையே பரஸ்பர ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய பங்குச் சந்தை கண்காணிப்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அபுதாபியின் நிதி ஒழுங்குமுறை ஆணையம் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பகிர்வு ஆகியவற்றுக்காக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.

இந்த ஒப்பந்தம், இரு அமைப்புகளிடையே பொருளாதார இணைப்பையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்தி, பங்குச்சந்தைகள் வளர உதவும். மேலும் இரு அமைப்புகளிடையே தகவல் பரிமாற்றத்துக்கும் பெருமளவில் உதவும்.