Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போடோ ஒப்பந்தம் போடோ மக்களுக்கு புதிய விடியலின் தொடக்கமாக அமையும்; அஸ்ஸாமின் ஒற்றுமை & ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்: பிரதமர்

அஸ்ஸாம் மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியில், போடோ ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  போடோ  ஒப்பந்தத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ள அவர், ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்  & அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்’ என்ற மந்திரங்கள் மற்றும் ‘ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம்’ என்ற உணர்வால் ஈர்க்கப்பட்டதே இந்த ஒப்பந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய பாபுவை அவரது நினைவு நாளில் இந்தியா நினைவுகூரும் வேளையில், அஸ்ஸாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைக் கண்டுள்ளது.  50 ஆண்டுகள் காத்திருந்த பிறகு, நமது போடோ நண்பர்களுடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் புதிய விடியலின் தொடக்கமாக அமைந்துள்ளது.  இது அஸ்ஸாமின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, வளர்ச்சியை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

போடோ அமைப்புகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, போடோ பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது அரசின் தலையாய முன்னுரிமையாக உள்ளது.  ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. வாழ்க்கையை எளிதாக்கி, அரசுத் திட்டங்கள் மூலம், போடோ மக்கள் முழுமையாக பயனடைவதை உறுதி செய்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

போடோ நண்பர்கள் அமைதிப் பாதையில் நம்முடன் இணைந்திருப்பது, வன்முறைப் பாதையை கைவிட்டு,  ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை வைத்தால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளது.    போடோ நண்பர்களை தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.  போடோ பகுதிகளின் மேம்பாட்டை உறுதி செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 

50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த போடோ பிரச்சினைக்கு, மதிப்புக்குரிய பாபுவின் (காந்தியடிகளின்) நினைவு தினமான இன்று தீர்வு ஏற்பட்டுள்ளது.  போடோ குழுக்கள் & அரசு இடையிலான இந்த உடன்படிக்கை, அஸ்ஸாமின் ஒற்றுமை & ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்.  வன்முறைப் பாதையை கைவிட்டு, ஜனநாயகம் & அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைப்பது என்ற எனது போடோ நண்பர்களின் முடிவை நான் வரவேற்கிறேன்.

போடோ நண்பர்களுடன் நாங்கள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை, அஸ்ஸாம் மற்றும் நாட்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட  பிற மாநிலங்களுக்கும் ஒரு பாடமாகும்.  வன்முறை மற்றும் அச்சமற்ற சூழல் இருந்தால்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க முடியும்.  போடோ நண்பர்களின் ஒட்டுமொத்த ஆற்றலும், அஸ்ஸாமின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்பது மகிழ்ச்சிக்குரியது.

அஸ்ஸாமில் உள்ள பிற சமுதாயத்தினரின் நலன்களையும் பாதுகாக்கும் வேளையில்தான் போடோ நண்பர்களுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.  இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி, இது மனிதகுலத்தின் வெற்றி. ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்  மற்றும் அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்’ என்ற மந்திரங்கள் மற்றும் ‘ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம்’ என்ற உணர்வால் ஈர்க்கப்பட்டதே இந்த ஒப்பந்தம்.

@narendramodi

மதிப்பிற்குரிய பாபுவை அவரது நினைவு நாளில் இந்தியா நினைவுகூரும் வேளையில், அஸ்ஸாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைக் கண்டுள்ளது.  50 ஆண்டுகள் காத்திருந்த பிறகு, நமது போடோ நண்பர்களுடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் புதிய விடியலின் தொடக்கமாக அமைந்துள்ளது.  இது அஸ்ஸாமின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, வளர்ச்சியை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்

@narendramodi

போடோ அமைப்புகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, போடோ பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது அரசின் தலையாய முன்னுரிமையாக உள்ளது.  ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. வாழ்க்கையை எளிதாக்கி, அரசுத் திட்டங்கள் மூலம், போடோ மக்கள் முழுமையாக பயனடைவதை உறுதி செய்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்

போடோ நண்பர்கள் அமைதிப் பாதையில் நம்முடன் இணைந்திருப்பது, வன்முறைப் பாதையை கைவிட்டு,  ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை வைத்தால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளது.    போடோ நண்பர்களை தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.  போடோ பகுதிகளின் மேம்பாட்டை உறுதி செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த போடோ பிரச்சினைக்கு, மதிப்புக்குரிய பாபுவின் (காந்தியடிகளின்) நினைவு தினமான இன்று தீர்வு ஏற்பட்டுள்ளது.  போடோ குழுக்கள் மற்றும் அரசு இடையிலான இந்த உடன்படிக்கை, அஸ்ஸாமின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்.  வன்முறைப் பாதையை கைவிட்டு, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைப்பது என்ற எனது போடோ நண்பர்களின் முடிவை நான் வரவேற்கிறேன்.