Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் விடுத்த அறிக்கை

நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் விடுத்த அறிக்கை


நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நடைபெற உள்ள கலந்துரையாடல்கள் முக்கியமாக நிதி சார்ந்த விஷயங்களாகவே அமையும்….. அவையின் முதல்பாதி மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி எடுத்தன. பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. இது ஏற்படுத்திய மகிழ்ச்சி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகத்திலும் தெரிந்தது.

இம்முறையும் அனைத்து உறுப்பினர்களும் அதே உற்சாகத்துடனும் ஜனநாயகத் தன்மையுடனும் அனைத்து விஷயங்கள் குறித்த விவாதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த அவையில் ஜனநாயக முறைமையை எடுத்துரைக்கும் வகையில் சுதந்திரமான விவாதங்கள் நடைபெறும். முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.

நன்றி.

*******