பி.எம்.இந்தியா
ஃபிஜி பிரதமர் ரியர் அட்மிரல் (ஓ.ய்வு) ஜோசையா வோரேகி பைனிமராமா இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
2016 பிப்ரவரி 20-ஆம் தேதி ஃபிஜியைத் தாக்கிய வின்ஸ்டன் என்ற ஜந்தாம் ரகப் புயல் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்து பிரதமர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பாக ஃபிஜிக்கு மறு வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கென அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
இந்தப் புயலுக்குப் பின் இந்தியா வழங்கிய 10 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 45 டன் உதவிப் பொருட்களுக்கு பிரதமர் திரு. பைனிமராமா திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
2015 ஆகஸ்டில் ஜெய்பூரில் நடைபெற்ற இரண்டாவது FIPIC உச்சி மாநாட்டில் பசிஃபிக் தீவு நாடுகளுடன் மண்டலத்துக்கான விண்வெளித் தொழில்நுட்பச் செயலி மையம் அமைப்பது உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் நிர்வாக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உறுதி மொழியைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
சூரியசக்தி, புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
Glad to meet PM Bainimarama & discuss India-Fiji ties. Fiji is a vital friend & we want our ties to grow further. https://t.co/Kr4TtnfGuP
— Narendra Modi (@narendramodi) May 19, 2016