Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு


இஸ்ரேல் பிரதமர் மாண்புமிகு பெஞ்சமின் நேதனியாஹூவிடமிருந்து நேற்று மாலை பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

இருதரப்பு உறவுகளின் மிகச் சிறப்பான முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். கொவிட்-19 உலகளவில் பரவி வரும் பின்னணியில் தற்போதைய உலக நிலைமை குறித்து அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.