பி.எம்.இந்தியா
ஆந்திர பிரதேசத்தில் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை முன் தேதியிட்டு ஒப்புதல் அளித்தது. இது ஆகஸ்ட் 20, 2015 அன்று ஆந்திர பிரதேச சொசைட்டிகள் பதிவு சட்டம் 2001ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை முதல் பட்டியலில் இணைக்கும் வகையில் தேசிய தொழில்நுட்ப, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி திருத்த மசோதா 2016 என்ற பெயரிலான மசோதாவை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஆந்திர பிரதேச தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை சொசைட்டிகள் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சொசைட்டியாக இருக்க அமைச்சரவை முன் தேதியிட்டு ஒப்புதல் அளித்திருப்பது ஆந்திர பிரதேச என்.ஐ.டி.க்கு சட்டரீதியான அந்தஸ்தை அளிக்கும். என்.ஐ.டி.எஸ்.இ.ஆர். சட்டம் 2007ல் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் அதன் மீது உயர் மட்டத்திலான நம்பகத்தன்மை மற்றும் அதன் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்தன் கல்விச் செயல்பாடுகளின் மீது அதிக பங்களிப்பை அளிக்கும்.
இந்த பயிற்சி நிறுவனத்திற்கு இந்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. இது தேசிய தொழில்நுட்ப அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் 2007 சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வரை ஆந்திர பிரதேசம் சொசைட்டிகள் பதிவு சட்டம் 2001ன் கீழ் பதிவு செய்யப்பட்ட சொசைட்டியால் நிர்வகிக்கப்பட்டு நடத்தபடும். இதன் கணக்குகள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.
பின்னணி :
என்.ஐ.டி. இல்லா ஆந்திர பிரதேச மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆந்திர பிரதேச என்.ஐ.டி. அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச என்.ஐ.டி., ஆந்திர பிரதேசத்திற்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும். ஆந்திர பிரதேச என்.ஐ.டி. தேசிய தொழில்நுட்ப அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் 2007ன் கீழ் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிறுவனமாக அறிவிக்கப்பட்டு அதன் மூலம் தொழில்நுட்ப கல்வியில் மக்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படும்.
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தற்காலிக வளாகத்தில் ஆந்திர பிரதேச என்.ஐ.டி. தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆந்திர பிரதேச என்.ஐ.டி.க்கான நிலத்தை ஆந்திர பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. அரசின் கொள்கைப்படி என்.ஐ.டி.க்களில் 51 சதவிகித இடங்கள் அது அமைந்துள்ள மாநிலத்தலருக்கு ஒதுக்கப்படும். ஆந்திர பிரதேச என்.ஐ.டி. ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை பட்டம், பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மட்டங்களில் அளிக்கும்.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014ன் 13வது பட்டியலில் (கல்வி) இந்திய அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை 12 மற்றும் 13வது திட்ட காலத்தில் ஆந்திர பிரதேசத்தில் அமைக்கும். அதன்படி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆந்திர பிரதேசத்தில் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை ஆந்திர பிரதேச சொசைட்டிகள் பதிவு சட்டம் 2001ன் கீழ் தற்காலிக வளாகத்தல் திறக்க முடிவு செய்தது. இது தேசிய தொழில்நுட்ப, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனச் சட்டம் 2007க்கு கீழ் கொண்டு வரும் வகையில் திருத்தம் செய்யப்படும் என்றும் முதல் 2 முதல் 3 ஆண்டுகள் வாராங்கல் என்.ஐ.டி. வழிகாட்டும் பயற்சி நிறுவனமாக இருக்கும் என்றும் நிரந்தர இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் அது தனித்து செயல்படும் என்றும் கூறியுள்ளது. ஆந்திர பிரதேச என்.ஐ.டி.க்கான நிரந்தர இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.