Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்கள் துறையில் இந்தியா-புரூனே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறி்த்து அமைச்சரவைக்கு அறிவிப்பு


மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது, இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்கள் துறையில் இந்தியா மற்றும் புரூனே தருசலாம் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், புரூனே-வின் பந்தர் சேரி பெகவான் பகுதியில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கையெழுத்தானது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் பரிமாற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், பயிற்சிக்காக அதிகாரிகள் மற்றும் பயிற்றுநர்களை பரிமாறிக் கொள்வது, விளையாட்டு வசதிகள், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு பயிற்சிகள், உடல்திறனை மேம்படுத்துதல், விளையாட்டுத் திறன், உடல்கல்வி ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும்.

மேலும், பயிற்சி அளித்தல், விளையாட்டுத் துறையில் திறமையானவர்களை அடையாளம் காண்பது, விளையாட்டு மேலாண்மை மற்றும் நிர்வாகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் தகவல் பரிமாற்றம், விளையாட்டுத் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, விளையாட்டுத் துறையில் தகவல்களை வலுப்படுத்தி, மேம்பாடு அடையச் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.


*****